📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 4:21-26

சினம் வேண்டாம்!

நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்…. எபேசியர் 4:26

அதிகாலை 2 மணி. தொலைபேசி மணி அலறுகிறது. இந்நேரத்தில் யார்? வெறுப்பு பாதி, பயம் பாதி. “ஹலோ” என்ற உங்கள் குரல் கேட்டதும், “மன்னிக்கவும், தவறான எண்” என்ற பதில். மறுபக்கம் திரும்பி, படுக்கையில் சொகுசுப்படும்போது மீண்டும் ஒலிக் கிறது தொலைபேசி. மீண்டும் அதே குரல்; அதே பதில். இப்போ உங்கள் நிலைமை என்ன? தொலைபேசியையே உடைத்தெறிய வேண்டும்போல கோபம் வராதா!

கோபம் யாருக்குத்தான் வருவதில்லை; அப ;படிப ;பட்ட சூழலில்தான் நாம் வாழுகிறோம். பவுலடியாரே, “கோபங்கொண்டாலும்…” என்று பச்சைக்கொடி காட்டியிருகிறார் என்று நாம் சொல்லலாம். கோபப்படவேண்டிய சந்தர்ப்பங்கள் உண்டு. தேவாலய முற்றத்தைக் கள்ளர் குகையாக்கியதைக் கண்ட ஆண்டவர் கோபங்கொண்டார். ஆம், தேவநாமம் அவமதிக்கப ;படும்போது கோபம் வரத்தான ; வேண்டும். பிறர் தரக்குறைவாக நடத்தப்படு வதைக் காணும்போது கோபம் வரத்தான் வேண்டும். அதாவது, தேவனுக்காகவும் பிறருக்காகவும் கோபப்படுவதில் நியாயம் உண்டு. ஆனால், நமது கோபம் எல்லாம் சுயம் கலந்ததாகவே இருக்கிறது என்பதுவே சிந்திக்கவேண்டிய விடயம். தேவனுக்காகச் சிங்கத்தைப் போலவும், நமக்காக ஆட்டுக்குட்டியைப்போலவும் வாழவே இயேசு நமக்கு மாதிரியை வைத்துள்ளார். நமது கோபஉணர்வு தவறு என்று வேதம் சொல்லவில்லை. ஆனால், அதனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டியதின் அவசியத்தை அது தெளிவுபடுத்தியிருக்கிறது. போத்தலுக்குள் அடைக்கப்பட்ட சோடா போன்றதுதான் கோப உணர்வும். அதன் மூடி கவனமின்றித் திறக்கப்படுமாயின் பல சேதங்கள் ஏற்படும். அது உள்ளங்களை உடைக்கும்; உறவுகளைச் சிதைக்கும். ஆகவேதான், அந்தக் கோபத்தை உடனேயே சரிசெய்யும்படி பவுல் புத்திசொல்லுகிறார். கோபத்திற்கு இடமளிப்பது சாத்தானுக்கு இடமளிப்பதற்குச் சமம். சிலசமயங்களில் நீதியுள்ள கோபம்கூட தானா கவே மூடியை உடைத்து வெளிவருமானால், அது கடுங்கோபமாக உருவெடுத்து அழிவையும் ஏற்படுத்திவிடும்.

“கோபங்கொண்டாலும்…” என சங்கீதம் 4:4ல் எழுதப்பட்டிருந்தாலும், நீடியபொறுமை, நீடிய சாந்தத்தைக் குறித்து வேதத்திலே பல இடங்களிலே எழுதப்பட்டுள்ளது. இவை ஆவியானவரால் நமக்குள் உருவாகுகிற ஆவியின் கனி. எல்லாவற்றுக்கும் மேலாக, நமது ஆண்டவர் தமக்கு அநீதி இழைக்கப ;பட்டபோதும்கூட, எப்படியாக அந்த சூழ்நிலை யைச் சந்தித்தார் என்பது நமக்குத் தெரியாததல்ல. இன்று நாம் யாரோடாவது கோபமாக இருக்கிறோமா? கொஞ்சமும் தாமதம் வேண்டாம். நாளை நாம் உயிருடன் இருப்போமோ இல்லையோ, யார் அறிவார்! ஆகவே, இன்றே, இப்போதே அதைச் சரிசெய்ய தேவஉதவியை நாடுவோமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

கோபங்கொள்ளக்கூடாது என்று எண்ணினாலும், நம்மையும் மீறி கோபம் வெடித்து வெளிவருகிறதா? இன்றே நீடிய சாந்தத்தால் நீடிய பொறுமையால் நம்மை நிரப்ப தேவசமுகத்தை நாடுவோமா!

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (14)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *