? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:1-4

எங்களுக்குப் போதிக்கவேண்டும்

…பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக… லூக்கா 11:2

தேவனுடைய செய்தி:

ஆண்டவர் எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று தருகிறார்.

தியானம்:

இயேசு ஓரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். சீஷர்கள் கேட்டுக் கொண்டதினால், அவர்களுக்கும் பிரார்த்தனை செய்யக் கற்றுக்கொடுத்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்கு நாம் மன்னிக்கவேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

எமது வாழ்வில், யாருடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்? யாருடைய அரசுக்காக நாம் பிரயாசப்பட வேண்டும்?

எனக்குத் தேவையான ஆகாரத்தை அன்றன்று தேவனிடம் கேட்கின்றேனா? நன்றியாவது கூறுகின்றேனா?

எனது பாவங்களை மறைக்காமல் இயேசுவிடம் அறிக்கையிடுகின்றேனா?

பிறருடைய குற்றங்களைக் குறித்த விடயத்தில் நான் எவ்வாறு நடந்து கொள்கிறேன்?

அவர்களை அவமானப்படுத்துகிறேனா? மன்னிக்கிறேனா?

“எங்களை தீயவனிடமிருந்து விடுவியும்” என்று நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்? தீமையிலிருந்து இரட்சிப்பு அவசியமானதா? எப்பொழுது?

இயேசு கற்றுத்தந்த பரமண்டல ஜெப மாதிரிக்கு ஒப்பாக இன்று நான் ஜெபிப்பேனா? தேவனைத் துதிப்பேனா? தேவைகளைச் சமர்ப்பிப்பேனா?

எனது பிள்ளைகளுக்கு, புதிய விசுவாசிகளுக்கு எப்படி ஜெபிக்க வேண்டும் என நான் கற்றுக்கொடுத்துள்ளேனா?

? இன்றைய சிந்தனைக்கு:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin