? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:22-25

விசுவாசம் எங்கே

அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார். உடனே அவைகள் நின்று போய், அமைதலுண்டாயிற்று.லூக்கா 8:24

தேவனுடைய செய்தி:

நம்முடைய தேவன் சூழ்நிலைகளை ஆளுகை செய்பவர்.

தியானம்:

அக்கரைக்குச் செல்ல இயேசுவும் சீடர்களும் படகில் ஏறினார்கள். இயேசுவோ ஆழ்ந்து தூங்கிவிட்டார். ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். விழித்தெழுந்த இயேசுவோ சீடர் களிடம், உங்கள் விசுவாசம் எங்கே என்று கேட்டதோடு காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன, அமைதி உண்டாயிற்று.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இயேசு காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிட்டார். அவைகளும் இயேசு வுக்குக் கீழ்ப்படிந்தன.

பிரயோகப்படுத்தல் :

ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று சொல்லி சீடர்கள் இயேசுவை எழுப்பியது ஏன்? இயேசுவோடு இருந்தும் அவிசுவாசம் வந்தது ஏன்?

சீஷர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், “இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டதைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

உங்கள் வாழ்வில் கொந்தளிப்பான பிரச்சனைகளையும் குழப்பங்களையும் நீக்கி, இயேசுவானவர் தரும் சமாதானத்தையும் அமைதியையும் நீங்கள் அனுபவித்துள்ளீர்களா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin