? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:24-35

தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் பெரியவர்

இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன். அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான். லூக்கா 7:27

தேவனுடைய செய்தி:

தேவன் தரும் ஞானமானது நீதியுள்ளதாய் இருக்கிறது.

தியானம்:

மனிதராய்ப் பிறந்தவர்களுக்குள் யோவானைவிடப் பெரியவர் ஒருவருமில்லை என கூறிய இயேசு, தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் யோவானைப் பார்க்கிலும் பெரியவனாய் இருக்கிறான் என்றார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

ஞானம் மெய்யானது. அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று. இயேசு தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும் பெரியவர்.

பிரயோகப்படுத்தல் :

வனாந்திரத்தில் யார் யாரைப் பார்க்க சென்றதாக இயேசு கூறுகின்றார்? அவரை விட மேலானவர் யார்?

“இதோ! என் தூதனை (யோவான் ஸ்நானகனை) உமக்கு முன் அனுப்புகி றேன். அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்” இங்கு உமக்கு, உமது என வசனம் குறிப்பிடுவது யாரை?

இயேசுவுக்கு முன் அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகளைப் பார்க்கிலும், இயேசு பெரியவர் என்ற சத்தியத்தை யூதர்கள் கவனிக்கத் தவறியது ஏன்?

தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டு, யோவானிடம் ஞானஸ்நானம் பெற்ற வர்கள் யார் யார்? பரிசேயரும் வேதபாரகரும் எதைத் தள்ளிவிட்டார்கள்? ஆண்டவர் வகுத்த தேவ திட்டத்தை இன்று நான் புறக்கணிக்கிறேனா?

வசனம் 32, 34ன்படி, குறை சொல்லி, விளையாடும் சிறு பிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள் யார்? அவர்கள் இயேசுவைக் குறித்தும் யோவானைக் குறித்தும் கூறுவது என்ன? அவர்களை யாருக்கு ஒப்பிடலாம்?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin