? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமுவேல் 31:8-13 

 சவுலின் இறுதி முடிவு

பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்து போய், …சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் …கொண்டுவந்து, …தகனம் பண்ணி,..  1சாமுவேல் 31:12 

?  தேவனுடைய செய்தி:

தேவன் தெரிந்துகொண்ட நபராக, ஒரு ராஜாவாக இருந்தாலும், அவன்  கர்த்தரை விட்டுவிட்டால், அவனது முடிவு பரிதாபமே.

?   தியானம்:

சவுலும் அவனது ஆயுததாரியும் அவனது மூன்று மகன்களும் இறந்தார்கள்.  இச் செய்தியை ஜனங்களுக்குள் பெலிஸ்தியர் பிரசித்தப்படுத்தி அவன்  தலையை வெட்டி, உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப் போட்டார்கள். ஆனால், யாபேசின் பலசாலிகள் எழுந்து சென்று உடலை கொண்டு வந்து, தகனம் பண்ணி, எலும்புகளை எடுத்து, தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம் பண்ணினார்கள்.

?  விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனால் ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டு ராஜாவான சவுல்,  தேவனை புறக்கணித்தபடியினால், தனக்குரிய முடிவை தானே தேடிக்கொண்டான்.

?  பிரயோகப்படுத்தல் :

தாவீதைக் கொலை செய்ய துடித்த சவுலின் முடிவு எப்படிப்பட்டது? சவுல் ராஜா இறந்ததைக் கண்ட இஸ்ரவேலர் செய்தது என்ன?

பெலிஸ்தர் சவுலின் உடலுக்கு செய்தது என்ன? யாபேசின் மனிதர்கள் செய்தது என்ன? யாபேசின் மனுஷர் சவுலுக்காக ஏழுநாள் உபவாசம் பண்ணியதைக் குறித்து என்ன சிந்திக்கின்றீர்கள்?

சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம்பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக (2சாமு 2:5) என தாவீது யாபேசின் மனுஷரை ஆசீர்வதித்ததன் காரணம் என்ன?

எதிராளிகளின் முடிவை கண்டு நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம்? தேவனை புறக்கணித்தவர்களின் முடிவை நேரில் கண்டதுண்டா?

?  எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin