? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 25:1-28

?  முழு மனதுடன்…

அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை. 2நாளாகமம் 25:2

‘இந்நாட்களில் பாதி கிறிஸ்தவம், பாதி உலகம் என்பதுபோலத்தான் கிறிஸ்தவ வாழ்வு இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. உணர்ச்சிவசப்பட்டு ஆராதிக்கிறார்கள்; அடுத்த நிமிடமே அவர்களது நடவடிக்கையே மாறுபாடாய்த் தெரிகிறது” என்று ஒரு நண்பி சொன்னபோது என்னால் அதைத் தட்டிக்கழிக்கமுடியவில்லை. ஏழு வயதில் ராஜாவாகி, நாற்பது வருஷம் அரசாண்டபோதும், யோவாஸ் துக்ககரமாகவே மரித்துப்போனான். அவனது மகன் அமத்சியா 25 வயதிலே ராஜாவானான். அந்த வயது நிதானிக்கத்தக்க வயது. ஆனால், அவன் வாழ்க்கை நம்மில் பலரின் வாழ்க்கையைப்போல தழும்பல் நிறைந்ததாக, பாதி கடவுள், பாதி உலகம் என்பதுபோலவே இருந்தது. கர்த்தாpன் பார்வைக்குச் செம்மையாய் நடந்தாலும், முழு மனதோடு நடக்கவில்லை என்றால், அவன் பாதி கடவுள், பாதி உலகம்தானே! தன் தகப்பனைக் கொன்றவர்களின் பிள்ளைகளைக் கொல்லாமல் கர்த்தரின் கட்டளைப்படி நடந்தாலும், கொன்றவர்களைக் கொன்றுபோட்டு, கொலை செய்யாதிருப்பாயாக என்ற கட்டளையை மீறினான். கர்த்தருடைய மனுஷன் சொன்னபடியே யுத்தத்துக்குப்போக அழைத்த இஸ்ரவேலரைத் திருப்பி அனுப்பினான்; அப்படியே கர்த்தரும் அவனுக்குச் சேயீர் புத்திரரின்மீது வெற்றிகொடுத்தும் அவர்களது தெய்வங்களை பணிந்துகொள்ள தொடங்கியதேனோ? இறுதியில் இஸ்ரவேலினாலேயே அமதிசியா தோற்கடிக்கப்பட்டு, தன் சொந்த ஜனத்தினாலேயே கொலைசெய்யப்பட்டான்.

இன்று நமது நடபடிக்கைகளை உண்மை உள்ளத்தோடு சிந்திப்போம். ‘உம்மை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்”என்று உணர்ச்சிவசப்பட்டு பாடுகின்ற நாம், உண்மையாகவே முழு மனதோடுதான் கர்த்தரைச் சேவிக்கிறோமா? எதற்கும் ஆரம்பத்திற்கு ஒரு ஜெபம் அல்லது ஒரு ஜெபக்கூட்டம், அதில் நாம் தவறுவதில்லை. ஆனால் பின்னர் நமது காரியங்கள் எப்படித் தொடருகின்றன என்பதில்தான் சவால் எழும்புகிறது. எப்போது ஜெபம் முடியும் என்று உலகம் காத்து நிற்கிறது. நாமும் அதனை கரம் அசைத்து அழைத்து, நாகரீகம், இன்றைய காலகட்டம் என்று எதையோ சொல்லி, பாதி மனதை உலகத்துக்கு தாரைவார்த்து விடுகிறோம். கர்த்தரை முழுதாக நம்புவோமாக. மனுஷரைத் திருப்திப்படுத்துவதிலும், நமது பெருமைகளைக் காட்டுவதிலும் தான் நமது பாதிக் காரியம் கறைபட்டுப்போகிறது. முழுமனதோடு என்றால் முழு மனதுதான்; அங்கே பங்கு பிரிக்கமுடியாது. கர்த்தரை நாம் நம்பலாம். ஏன் தெரியுமா? ‘அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான்.” 2நாளாகமம் 25:9

? இன்றைய சிந்தனைக்கு:

கர்த்தர் கொஞ்சத்தின் அல்ல, அதிகமதிகத்தின் தேவன். அவர் என்னைப் பராமரிப்பார் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டா? உண்டானால் முழு மனதில் பாதியைப் பிரிக்காதிருப்பேனாக.

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

Solverwp- WordPress Theme and Plugin