? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : கொலோசெயர் 3:12-15

ஒருவருக்கொருவர்…

ஒருவரையொருவர் தாங்கி…. கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். கொலோசெயர் 3:13

“ஒருவர் தவறை மற்றவர் மன்னித்து, தவறு செய்தவரை ஏற்றுக்கொண்டு அன்புசெலுத்தா விடில், நாம் எப்படி பரமண்டல ஜெபத்தைச் சொல்ல முடியும்” என்று கேட்டார் ஒருவர். இது எத்தனை உண்மை. வெறும் ஜடங்கள ;போலவே சில ஜெபங்களை நாம் செய்து விடுகிறோம். தினமும் ஜெபிக்கிறோம்; வேதம் வாசிக்கிறோம். ஆனால், பிறரை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்துவின் அன்பு நம்மில் வெளிப்படாவிட்டால் நாம் வாழ்ந்து என்ன பயன்?

 1994ம் ஆண்டளவில் ருவண்டா தேசத்தில் நடந்த பயங்கரமான படுகொலையில் தங்கள் குடும்பத்தை அழித்து, சிதைத்து, சின்னாபின்னமாக்கிய இரண்டு போர்வீரர்களை ருவண்டா தேசத்துப் பெண்கள் இருவர் நேருக்கு நேர் சந்தித்தார்களாம். துக்கத்தையும் வேதனையையும் சுமந்திருந்த இப் பெண்கள் அந்தப் போர்வீரர்களைக் கண்டதும் என்ன செய்தார்கள் தெரியுமா! அவர்களைச் சபிக்கவில்லை; திட்டவில்லை. அவர்களை மன்னித்துவிட்ட மனதுடன் கைகொடுத்து, கடந்துசென்றதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பெண்கள் இப்படியானதொரு முன்மாதிரியைக் கொண்டிருப்பார்களானால், நமக்கு விரோதமாக சாதாரண காரியங்களைச் செய்தவர்களையே நம்மால் மன்னிக்கமுடியா திருப்பது எப்படி? மன்னிக்கும் இருதயத்தைக் கேட்டுப் பெற்றுக்கொள்வோமாக.

தேவனுக்கு நன்றி செலுத்துவது என்பது வெறும் பாடல்களுடன் முடிந்துவிடக்கூடாது. அது மாய்மாலம். நன்றி நமது உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழவேண்டும். அதாவது, நன்றியுள்ள இதயம் நமது வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருக்கவேண்டும். இயேசுவை அறிந்திராத அனுபவிக்காத தாவீது, மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவாய் தேவன் தன் பாவங்களை மன்னித்தார் என்று வெறுமனே பாடிவிட்டுக் கடந்துபோகவில்லை. மாறாக, அதனைத் தன் வாழ்விலே வெளிப்படுத்தி காட்டினார். உயிரோடிருக்கு மட்டும் தன்னைக் கொன்றுபோடும்படி பின்தொடர்ந்த சவுலும் அவனது குமாரரும் இறந்துவிட்ட செய்தி கேட்டபோது தாவீது மகிழ்ச்சியடைந்திருந்தால் அது நியாயம். ஆனால், தாவீதும் அவரோடிருந்தவர்களும் புலம்பி அழுது சாயங்காலம் மட்டும் உபவாசம் இருந்தார்கள். அதுமாத்திரமல்ல, தாவீது தான் ராஜ்யபாரத்தைப் பொறுப்பெடுத்ததும் சவுலின் சந்ததியில் ஒருவன் இருப்பதைக் கேள்விப்பட்டு, அவனைத் தேடிக்கண்டுபிடித்து, அவனுக்கு சகல வசதிகளையும் செய்துகொடுத்தார். தேவன் அருளிய மன்னிப்பை உணர்ந்து அனுபவிக்கின்ற ஒருவருக்கு, அடுத்தவரை மன்னிப்பது கடினமே இல்லை. நாம் அடுத்தவரை மன்னிக்கும்போது, தேவனுடைய மன்னிப்பளிக்கும் இருதயத்தையே நாமும் வெளிப்படுத்துகிறோம். நாம் அப்படித்தான் ஜீவிக்கிறோமா?

? இன்றைய சிந்தனைக்கு:

 இதுவரை யாரையாவது மன்னிக்காமல், ஒதுக்கிவைத்திருக்கி றேனா? இன்றே அதைச் சரிப்படுத்தி ஒப்புரவாக பரிசுத்த ஆவியானவர் கைகளில் என்னைத் தருவேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin