? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:46-49

வார்த்தையின்படி செய்

என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? லூக்கா 6:46

தேவனுடைய செய்தி:

தேவ வார்த்தைகளைக் கேட்டால், அதன்படி நாம் கீழ்ப்படியவேண்டும்.

தியானம்:

இயேசு கூறியுள்ள வேத வார்த்தைகளைக் கேட்டும் அதன்படி நடக்காதவன், அடித்தளமில்லாமல் மண்மீது வீடு கட்டியவனுக்கு ஒப்பாவான்.  வெள்ளம் அதன் மீது மோதியதும் அது இடிந்து விழுந்தது. அவ்வீட்டிற்குப் பெரும் அழிவு ஏற்பட்டது. அவ்வாறே, இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவன், ஆழத்தோண்டி, பாறைமீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டுகிறவனுக்கு ஒப்பானவன். வெள்ளம் பெருக்கெடுத்து வீட்டின்மீது மோதியும், அது நன்றாகக் கட்டியிருப்பதால் அசையாது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான், நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன்(நீதி 10:25).

பிரயோகப்படுத்தல் :

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவன் யாருக்கு ஒப்பாக இருக்கின்றான்?

இயேசு கூறியுள்ள வார்த்தையின்படி செய்யாமல் அவரை, “ஆண்டவரே, ஆண்டவரே” என்று அழைப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனின் வீடு முழுவதும் அழிந்தது (6:49) என நம்மை இயேசு எச்சரிப்பது ஏன்?

? இன்றைய சிந்தனைக்கு:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin