குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 30 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  30:1-8

?  கர்த்தரை நோக்கிப் பார்!



தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். 1சாமுவேல் 30:6

? தியான பின்னணி:

பெலிஸ்திய பிரபுக்கள் தாவீதை யுத்தத்திற்கு அழைத்து செல்லாததால், மீண்டும் சிக்லாக் வந்த தாவீதுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அமலேக்கியர்  அந்த நகரை அக்கினியினால் சுட்டெரித்து, எல்லாரையும் சிறைபிடித்துச்  சென்றிருந்தார்கள்.

? பிரயோகப்படுத்தல் :

❓ தாவீது மிகவும் நெருக்கப்பட்டது ஏன்? அவனைக் கல்லெறிய வேண்டும்  என்று சொல்லிக்கொண்டவர்கள் யார்? ஏன்? அதற்கு தாவீதின் மறுத்தரவு  என்னவாக இருந்தது?

❓ தாவீது எப்பக்கமும் ஓட முடியாமல் மாட்டிக்கொண்டு, தேவன் பக்கம்  திரும்பிய இச்சந்தர்ப்பத்தைக் குறித்து என்ன யோசிக்கிறீர்கள்? இவ்வித  அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா? 

❓ தாவீதைப்போல பயத்தோடும், மன வேதனையோடும் வாழ்ந்துகொண்டிருக் கிறாயா? வச 8ல் கர்த்தர் அவனுக்குக் கொடுத்த நம்பிக்கை என்ன?

❓ ‘சத்தமிட்டு அழுதார்கள்.” இவ்வாறு மற்றவர்கள் துயரப்படும்போது நாம்  என்ன செய்வோம்?

? தேவனுடைய செய்தி:

▪️ தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு  என்ன செய்வான்? (சங்கீதம் 56:4)

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

சூழ்நிலை மாறினாலும், கர்த்தர் மாறாதவர். மனிதர்கள் மாறலாம்.  கர்த்தரோ நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே.    

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whatsapp: +94768336006

Solverwp- WordPress Theme and Plugin