­­ ? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யாக் 1:12-18

சோதனையை மேற்கொள்வோம்!

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர்… ஜீவ கிரீடத்தைப் பெறுவான். யாக்கோபு 1:12

பனிக்கட்டி ஒன்று பனிமலையிலிருந்து கீழ் நோக்கி உருண்டு செல்லச்செல்ல அதன் பருமன் அதிகமாகி, வேகமும் அதிகமாகி, தரையைக் கிட்டும்போது அதிக பருமனாகவும் அதிக வேகத்தில் வந்து விழும். சிலசமயம் அது பெரிய அழிவைக்கூட ஏற்படுத்தி விடும். இப்படித்தான் பாவசோதனையும். அதைச் சரியான நேரத்தில் சரியாகக் கையாளாவிட்டால், நம்மையும் கீழ்நோக்கி நகர்த்தி, வேகமாக நம்மை மோதியடித்து விடும்.

யாக்கோபு குறிப்பிடுகின்ற சோதனை என்பது, தேவனிடத்திலிருந்து வருவது அல்ல; அவர் நன்மைகளின் பிதா. ஆக சோதனை என்பது, தீதான நினைவுகளிலேயே ஆரம் பிக்கிறது. பல காரணங்களால் உருவாகுகின்ற சிந்தனை தீயதா நல்லதா என்பது நமக்கு நன்கு தெரியும். என்றாலும் தீய சிந்தனைகள் நம்மை வேகமாகப் பற்றிப்பிடித்து விடுகின்றன. அத்தீய சிந்தனையை நமக்குள் அசைபோட்டு, அது நமக்குள் வாழுவ தற்கு இடமளிக்கும்போது, அதுவே நமது ஆசையாகி, எப்படியாவது அதை அடைய வேண்டும் என்ற இச்சையைத் தோற்றுவித்துவிடும். இச்சை தகுந்த தருணத்தில் செயலில் வெளிப்பட்டு, வெட்கம் குற்றஉணர்வு என்று பல விளைவுகளை ஏற்படுத்தி நமது வாழ்வையே சிதைத்து, அது நிறைவாகும்போது நம்மைச் சாகடித்துவிடுகிறது.

ஆண்டவர் நமக்குள் வாழும்போது எப்படி சோதனை நம்மைத் தாக்கலாம் என்று நாம் நினைக்கலாம். ஆண்டவர் அழித்துப ;போடும் சோதனைகளால் நம்மைச் சோதிப்பவரும் அல்ல, சோதனைக்குள் விழுந்துவிட்ட எவராவது அவரை நோக்கிக் கூப்பிட்டால் மௌனமாக இருப்பவரும் அல்ல. ஆனால் நமக்கு சுதந்திரம் உண்டு. சிந்தனையில் சிறு சோதனை உருவாகும்போதே அதைப் பகுத்தறிந்து, அது வலுப்பெற முன்னரே அதை அழித்துப ;போடவும் நம்மால் முடியும்; அல்லது அதற்கு இடமளித்து நாமே அழிந்துபோகவும் முடியும். நமக்கு உதவிட, தூக்கிவிடக் கர்த்தர் எப்போதும் ஆயத்த மாகவே இருக்கிறார். அவருடைய கிருபை மாறாதது. ஆனால் நாம் விரும்பி விழும் போது அது நமக்கே தீங்காக மாறும். சோதனை என்பது நமது உள்மனப்போராட்டம். வெளியே சொல்லமுடியாமல் மெல்லவும் முடியாமல் மனதினுள் தத்தளிக்கும்போது, தீமை நம்மை இலகுவாக மேற்கொள்ளும். இன்றும் நம்மில் எத்தனைபேர் இப்படிப்பட்ட சோதனைகளில் அகப்பட்டுத் தடுமாறுகிறோம்! கர்த்தர் நமக்கு ஒரு நம்பிக்கையை வைத்திருக்கிறார். சோதனையைச் சகித்து, மேற்கொள்ளும்போது, அவர் நமக்கு ஜீவ கிரீடத்தையே தருவதற்கு ஆயத்தமாயிருக்கிறார். அந்த ஜீவ கிரீடத்தை நமது கண்க ளுக்கு முன்பாக நிறுத்தினாலே, நமக்கு நிச்சயம் ஒரு தைரியம் உண்டாகும். நமக்குள் உள்ள உள்மனப்போராட்டங்களை கர்த்தருக்கு மறைக்கவேண்டிய அவசியமில்லை. சிந்தனை சோதனையாகி இச்சையாகி வெளிவரமுன்னரே அதை முறியடித்து ஜெயம் பெற கர்த்தரின் பெலனை நாடுவோமாக!

? இன்றைய சிந்தனைக்கு: :

எனக்குள் போரிடுகிற சிந்தனைகளை எப்படிப்பட்டவை? மரணமா? ஜீவனா? நானே தீர்மானிப்பேனாக

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin