? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 5:1-11

பேதுரு, யாக்கோபு, யோவான்

அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். லூக்கா 5:11

தேவனுடைய செய்தி:

தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்தவர்கள் நன்மையை அனுபவிப்பார்கள்.

தியானம்:

கெனெசரேத்து கடலின் அருகே இயேசு தேவ வசனத்தைப் போதித்து முடித்த பின்பு, ஆழத்திலே போய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என இயேசு சீமோனிடம் கூறுகிறார். இராமுழுவதும் பிரயாசப்பட்டு ஒன்றும் அகப்படாத நிலையில், இப்போது வலை கிழிந்துபோகத்தக்கதாக இரு படவுகளும் அமிழத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நாமும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

‘நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும்” (வ.8)

என்ற உணர்வு சீமோன் பேதுருவுக்கு வந்தது ஏன்? இந்த அனுபவத்தை

எனது வாழ்வில் நான் அனுபவித்ததுண்டா?

வசனம் 11ன்படி, பேதுரு, யாக்கோபு, யோவான் மூவரும் செய்தது என்ன?

கர்த்தருடைய வார்த்தையின்படி நாம் கீழ்ப்படியும்போது நடைபெறுவது என்ன?

‘பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய்” என்பதன்

அர்த்தம் என்னவாக இருக்கும்? அதன்படி, நாம் இயேசுவை

பின்பற்றுகின்றோமா? அவருக்கான சேவை எது?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin