குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 27 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  27:8-12

?  நம்பிக்கைத் துரோகம்

அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே இருந்த குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டு வந்தான். 1சாமுவேல் 27:11

? தியான பின்னணி:

ஆகீஸ் கொடுத்த பட்டணத்தில் தங்கியிருந்த தாவீது, ‘யூதாவின் பட்டணங்களைக் கொள்ளையடிக்கிறேன்”என பொய்யை கூறி, ஏமாற்றிக்கொண்டு செயற்படுகின்றான்.

? பிரயோகப்படுத்தல் :

❓  வசனம் 8 ல் தாவீது தாக்கின நாட்டினர் யார்?

❓  தான் கொள்ளையடித்தது யூதாவின் மக்கள் (வச 10) எனக்கூறியும், 11ம் வசனத்தின்படி, தான் செய்ததை யாரும் காத்துக்கு வந்து, ஆகீசிடம் அறிவிக்காதபடிக்கு செயல்பட்டதைக்குறித்து உங்கள் கருத்து யாது?

❓  நாம் நம்பினவர்கள் எம்மை ஏமாற்றும்போது, எப்படிப்பட்ட மனநிலைக்கூடாக செல்வோம்?

❓  கடந்தவாரத்தில், ‘நீங்கள் யாரிடத்தில் திட்டமிட்டு மறைத்த சந்தர்ப்பம் அல்லது பொய் சொன்ன சந்தர்ப்பம் உண்டா? செய்ததுண்டானால், அதை சரிசெய்ய என்ன செய்யப் போகின்றீர்கள்?

? தேவனுடைய செய்தி:

▪️ உலக நட்பில், ஏமாற்றமும் ஏக்கமும் உண்டு. ஆனால், கிறிஸ்துவின் நட்பிலே, என்றும் நம்பிக்கையும், நன்மையும் மட்டுமே உண்டு.

? அறியவேண்டிய சத்தியம்:

மற்றவர்களின் பார்வையில் விருப்பமானதைச் செய்வதுபோல பசாங்கு செய்வதும், பாவத்தில் இருந்துகொண்டு பாதுகாப்பை தேடுவது போலாகும்.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

54 thoughts on “29 ஆகஸ்ட், 2020 சனிக்கிழமை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin