? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 17:20-37

தேவனுடைய ராஜ்யம்

தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான். இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான். லூக்கா 17:33

தேவனுடைய செய்தி:

இயேசு தமது வல்லமையினால் அநேகரை குணமாக்கினார்.

தியானம்:

இயேசுவானவர் மீண்டும் வரும்போது மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசை வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார்.


விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே.

பிரயோகப்படுத்தல் :

“தேவனின் இராஜ்யம் எப்போது வரும்?” என்று கேட்டவர்கள் யார்? அதற்கு இயேசு கூறிய பதில் என்ன?

நோவா வாழ்ந்த காலத்து மக்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்? இன்றுள்ள மக்களிடம் அதே குணாதிசயம் காணப்படுகின்றதா?

லோத்தின் காலத்தில் நடைபெற்ற அழிவைப்போன்று இன்றும் உலகம் முகங்கொடுக்கின்ற அழிவு என்ன?

வசனம் 34-36ன் படி, “ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான்; மற்றவன் கைவிடப்படுவான்” என்பதன் அர்த்தம் என்ன?

இறந்த சடலத்தை அக்காலத்து மக்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்? (வசனம் 37) இப்பதிலுக்கான காரணம் என்ன?

மனித குமாரன் மீண்டும் வரும்போது நடைபெறும் காரியங்கள் எவை?

எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin