? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2நாளாகமம் 24:17-27

?♀️  உறுதியான வேலி!

யோய்தா மரணமடைந்த பின்பு, யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள். அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான். 2நாளாகமம் 24:17

ராணியின் குடும்பம் மகிழ்ச்சியோடு வாழ்ந்துவந்தனர். குடும்பத்தை அதிகம் நேசித்த அவளது கணவன், குடும்பத்துக்கு ஒரு வேலியாக இருந்தான். அந்த வேலியைத் தாண்டி எவரும் எதுவும் நுளைய முடியாதிருந்தது. எதிர்பாராத விதத்தில் அவன் புற்றுநோய் கண்டு மரித்தபோது ராணியின் வேலை அசைவுகண்டது. கணவன் என்ற வேலி சிதைந்ததும், ஆறுதல் என்ற பெயரில் அவளை நாடி வந்தவர்களை அடையாளங் காண முடியாமல் தலையசைத்ததால், நாளடைவில் அவளுடைய குடும்பமே சிதைந்துபோனது. இன்றும் இப்படிப்பட்ட குடும்பங்களை நாம் காண்கிறோம்.

அத்தாலியாளின் கொலை வெறிக்கு தப்புவித்து, ஆறு வருடங்களாக வளர்த்துவந்த யோய்தா என்ற வேலிக்குள் அமர்ந்திருந்து, கர்த்தருடைய பார்வையில் செம்மையாய் வாழ்ந்தவன்தான் யோவாஸ் ராஜா. அப்படியே வாழ்ந்திருக்கலாம்! ஆனால், எப்போது யோய்தா என்ற வேலி மரணமடைந்ததோ, அப்படிப்பட்ட ஒருநாள் எப்போது வரும் என்று கார்த்திருந்ததுபோல வேற்று மனிதர் உள்ளே நுளைய ஆரம்பித்தனர். ராஜா செய்திருக்கவேண்டியது என்ன? நேற்றைய தினத்திலே ஒரு நீதிமொழி பார்த்தோமே, ‘உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி ஆலோசனையைக்கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்.” யோய்தா நல் ஆலோசனையில்தான் ராஜாவை நடத்தியிருந்தான்; ராஜாவும் அப்படியேதான் நடந்துவந்தான். அந்திய காலத்திலும் ஞானவானாயிருக்கும்படி கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை ராஜா என்ன செய்தான்? மறந்துபோனானா? அல்லது, வேலியைத் தாண்டி வந்தவர்கள் சொன்ன ஆலோசனையில் மயங்கிப்போனானா? கர்த்தரால் அனுப்பப்பட்ட, சகரியா, யோய்தாவின் குமாரனையும் கொன்றுபோட்டார்கள். யோய்தா தனக்குச் செய்த தயையும்கூட இந்த ராஜா உதாசீனம் செய்யுமளவுக்கு அவன் இருதயம் துணிகரம் கொண்டது என்ன? அப்படியே அவனுடைய முடிவும் பரிதாபமாய் முடிந்தது.

சிறுவயதிலிருந்து நமது நன்மைக்காகப் பாடுபட்ட பெற்றோர், ஆசிரியர், போதகர், அல்லது பாட்டன் பாட்டி என யாராக இருந்தாலும், நமக்கு வேலியாக இருந்தவர்களை சற்று நினைந்து பார்ப்போம். அவர்கள் எப்பொழுதும் நம்மோடு இருக்கமுடியாது. அந்த வேலிகள் அற்றுப்போகும் காலம் வரும். வந்தாலும், அவர்கள் அமைத்த வேலி நமது மனதில் இருக்கவேண்டும். இல்லையானால் சத்துரு லாவகமாக நுளைந்து விடுவான். இன்று நமக்குள்ள வேலி தேவவார்த்தை. இது ஒருபோதும் அற்றுப்போகாது. அதை உதாசீனப்படுத்தினால் சத்துரு நிச்சயம் நமக்குள் நுளைவான்.  ஜாக்கிரதையாக வார்த்தையாகிய வேலிக்குள் சரணடைவோமாக. ‘ஆகாத சம்பாஷணைகள் உன் நல்லொழுக்கத்தைக் கெடுக்கும்.” 1கொரிந்தியர் 15:33.

? இன்றைய சிந்தனை :

இன்று எனக்கிருக்கும் வேலி எது? வார்த்தையா? அல்லது, எனது மனதுக்குப் பிடித்த உலகமா?

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin