28 நவம்பர், 2020 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:59-80

அருணோதயம்

?   அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது  லூக்கா 1:79

? தேவனுடைய செய்தி:

எமது வாழ்க்கையில் தேவன் ஒரு சிட்சைக்கு உட்படுத்தி, அது முடிவடைந்த பின், நாம் ‘தேவனை” எப்படி பார்ப்போம்?

? தியானம்:

மக்கள் குழந்தைக்கு சகரியா என்று தந்தையின் பெயரை சூட்ட நினைத்தனர். பேசவேண்டிய நேரத்தில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரத்தில் நிம்மதியாக இருக்க முடியாது. எலிசபெத் வாயினால் பேசினாள். சகரியாவோ எழுத்தின் மூலம் ‘யோவான்” என பெயரிட்டான்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

எமது பிள்ளைகள் தேவனுக்குரியவர்கள். எமது சொத்தல்ல.

? பிரயோகப்படுத்தல் :

  • அநேக மாதங்களாக ஊமையாக இருந்த சகரியா முதலில் பேசிய வசனம் யாது?
  • வசனம் 67 ல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு கூறிய தீர்க்கதரிசனத் திற்கும் இன்றுள்ள தீர்க்கதரிசனத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் எவை?
  • ‘அருணோதயம்’ என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
  • தனக்குப் பிறந்த பிள்ளையைவிட, ‘அப்பிள்ளை யாரது பணிக்கு கொடுக்கப் பட்டது” என்பதில் சகரியாவைப்போன்ற தெளிவு நமக்குண்டா?
  • எமது பிள்ளைகளை எமக்கு விருப்பமான தொழிலை, பணியை, அல்லது எமது தொழிலை செய்ய ஊக்குவிக்கிறேனா? அல்லது கிறிஸ்துவின் சத்தியத்தின்படி வாழ ஊக்குவிக்கின்றேனா?

? எனது சிந்தனை :

? அனுதினமும் தேவனுடன்.

1,654 thoughts on “28 நவம்பர், 2020 சனி