? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 18:38-44

ஜெபஆலயங்களில் பிரசங்கம்

தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். லூக்கா 4:43

தேவனுடைய செய்தி:

கர்த்தருடைய ராஜ்யத்தின் பிரசங்கங்களை நாம் கேட்கவேண்டும்.

தியானம்:

இயேசு கலியாவிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டு வந்தார். அத்துடன், அவரது பிரசங்கங்களைக் கேட்ட மக்களிடம் தமது அற்புதங்களை நடப்பித்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் அற்புதம் செய்பவர். அவருடைய ராஜ்யத்திற்குரிய வர்களாகிய நாம் அவரிடம் நெருங்கி சேரவேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

சீமோனுடைய மாமியை இயேசு சுகமாக்கியது எப்படி? இன்று நான் இயேசுவிடம் எதிர்பார்ப்பது என்ன?

பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை இயேசு சுகமாக்கியது எப்படி?

பிசாசுகளை பேசவிடாமல் அதட்டி துரத்தியது ஏன்?

‘இயேசுவே கிறிஸ்து” என்று ஏவை அறிந்திருந்தன? நாம் அறிந்திருப்பது என்ன? இவ்விரண்டிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் என்ன?

ஜெபஆலயங்களில் இயேசு பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தது ஏன்?

இன்று நாம் செய்யவேண்டியது என்ன? எதைக் குறித்து பேசுகிறோம்?

எதைக் குறித்த பிரசங்கங்களைக் கேட்கின்றோம்?

இவ்வசனங்களின்படி, இயேசு எதற்காக இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார்?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Comments (127)

  1. Reply

    Aw, this was a really nice post. In concept I would like to put in writing like this additionally – taking time and actual effort to make an excellent article… however what can I say… I procrastinate alot and on no account seem to get something done.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *