? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 20:17-28

தைரியம் உண்டா?

பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் …பிரசங்கித்து, உபதேசம்பண்ணி… அப்போஸ்தலர் 20:20

எருசலேமிலே தனக்குக் கட்டுகளும் உபத்திரவங்களும் உண்டு என்பதைப் பரிசுத்த ஆவியானவரால் உணர்த்தப்பட்டு, தேவசித்தப்படி பவுல் எருசலேமுக்குப் புறப்பட்டுப் போகையில், எபேசு சபையின் மூப்பருக்குச் சொன்ன வார்த்தைகள் இன்று நம்மை சிந்திக்க வைக்கவேண்டும். ‘தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றைய தினம் சாட்சிகளாக வைக்கிறேன்” (அப்.20:26,27). எருசலேமிலே தனக்கு என்ன நடக்கும் என்று தெரியாவிட்டாலும், வேதனை உண்டு என்பது பவுலுக்குத் தெரிந்திருந்தது. அந்த நிலைமையிலும், தேவ ஊழியத்தினிமித்தம் பெரிய நம்பிக்கை வைத்திருந்த எபேசு சபை மூப்பரிடம் பேசிய இந்த நேர்மையான வார்த்தைகளை நாமும் சிந்திக்கவேண்டும்.

அப்போஸ்தலர் 20 ம் அதிகாரம் நம்மைக் கண்கலங்க வைக்கின்ற ஒன்று. இனித் திரும்பவும் எபேசு சபையாரை மாத்திரமல்ல, தான் யாரையும் சந்திக்கமுடியாது என்பதை உணர்ந்தவராகவே பவுல் எபேசு சபையின் மூப்பரிடம் பேசுகிறார். ‘எனக்காகஜெபியுங்கள். எப்படியாவது நான் திரும்பவர வேண்டும், உபத்திரவம் நேரிடக்கூடாது” என்றெல்லாம் பவுல் புலம்பவில்லை. பதிலுக்கு, அவர்களிடம் தன் ஊழிய பாரத்தை ஒப்புவித்தார். தன் முன்நிலையை, தன்னை இயேசு சந்தித்த அந்த அதிசய சம்பவத்தை அவர் மறந்ததில்லை. தன் இரட்சிப்பைக்குறித்து எவர் முன்பாகவும் தைரியமாகச் சாட்சிசொல்லவும் அவர் தயங்கியதில்லை. அதேசமயம் தேவன் தனக்கு வெளிப்படுத்திய வேத சத்தியங்களைப் பிறருக்குக் கூறவும், கிறிஸ்துவின் வருகைக்கென்று சபைகளை சத்தியத்தில் உறுதிப்படுத்தவும் அவர் பின்வாங்கியதில்லை. தனக்குத் தேவன் கற்றுக்கொடுத்த எதையும் தான் மறைக்கவில்லை என்பதை உறுதியோடு சொல்லுகிறார். சொல்வதுமட்டுமின்றி, அதை நடப்பித்துக் காண்பித்தார்.

‘இயேசுவின் வருகை சமீபமாகிவிட்டது’ என கடந்த நாட்கள் எல்லாம் பேசினோமே,பவுல் சொன்னதுபோல நம்மால் துணிவுடன் கூறமுடியுமா? நமக்குத் தேவன் தெரிவிக்காதவைகளைக்குறித்து அவர் கணக்குக் கேட்கமாட்டார்@ நாம் அறிந்த, பெற்ற, அனுபவித்த வேத சத்தியங்களை, இயேசு நம்மைச் சந்தித்த அதிசய சாட்சியை, அன்றாடம் வேதாகமத்தில் படிக்கும்போதும், ஜெபக்கூட்டங்களில் வேதப்படிப்புகளில் நாம் கற்றுக்கொண்டவற்றை நமது அடுத்த சந்ததிக்கு, நம்மைச் சுற்றியிருக்கிறவர் களுக்கு, நமது திருச்சபைக்கு உண்மைத்துவமாய்க் கடத்தியிருக்கிறோமா? ‘ஆம், அப்படியே செய்தேன்” என்று சத்தமிட்டுக் கூற நமக்குத் தைரியம் உண்டா?

? இன்றைய சிந்தனைக்கு:

நமது ஒவ்வொரு செய்கைக்கும் பேச்சுக்கும் ஒவ்வொரு அசைவுக்கும்கூட நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டியவர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

? அனுதினமும் தேவனுடன்.

Comments (201)

 1. Reply

  Howdy! Would you mind if I share your blog with my myspace group? There’s a lot of folks that I think would really appreciate your content. Please let me know. Cheers

 2. Reply

  I like the helpful information you provide in your articles. I will bookmark your blog and check again here regularly. I’m quite certain I’ll learn lots of new stuff right here! Good luck for the next!

 3. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 4. Reply

  I would like to thank you for the efforts you’ve put in writing this blog. I am hoping the same high-grade blog post from you in the upcoming as well. Actually your creative writing skills has encouraged me to get my own blog now. Really the blogging is spreading its wings fast. Your write up is a great example of it.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *