? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 2இராஜாக்கள் 5:1-19

சிறு பெண்ணின் சாட்சி

?  அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன்  சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில்  போவாரானால் நலமாயிருக்கும்… 2இராஜாக்கள் 5:3

பெயர் குறிப்பிடப்படாத ஒரு சிறுபெண், நாகமான் வாழ்விலும், நமது ஜீவியத்திலும் ஒரு சவாலாகத் திகழுகிறாள். இஸ்ரவேல் நாட்டைச் சேர்ந்த இவள் சீரியப்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு, நாகமானின் மனைவிக்கு வேலைசெய்ய அமர்த்தப்பட்டாள். இவளது மனநிலையைச் சற்றுக் கற்பனைபண்ணிப் பாருங்கள். அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்த சிறுமி, தனது தாயை, தகப்பனைப் பிரிந்து எவ்வளவாய் தவித்திருப்பாள்; இஸ்ரவேலன் அல்லாத ஒருவன் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட அப் பிஞ்சு உள்ளம் எத்தனையாய்த் துடித்திருக்கும். ஆனாலும், தனது எஜமானும், சீரிய நாட்டு ராஜாவின் மதிப்புக்குரிய படைத்தளபதியுமான நாகமான் குஷ்டரோகத்தினால் அவதிப்படுவதைக் கண்டபோது, அவள் பாராமுகமாக இருக்கவுமில்லை@ தனக்கு தீங்கிழைத்தவன் வேதனைப்படட்டும் என்று பழிவாங்கும் எண்ணத்துடன் பேசாமல் இருந்துவிடவுமில்லை. இச் சிறுபெண் பரிகாரம் கூறினாள். அதிகம் பேசவில்லை. ஒரு சிறு சாட்சிமாத்திரம் ஓரிரு வார்த்தைகளில் கூறினாள்@ அதன் விளைவோ விலையேறப் பெற்றதாயிருந்தது. இறுதியில் ‘உமது அடியேன் இனிக் கர்த்தருக்கேயல்லாமல் அந்நிய தேவர்களுக்கு சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை” என்று கூறி, இஸ்ரவேல் தேசத்து மண்ணைக் கேட்டு வாங்குமளவிற்கு இச் சிறுபெண்ணின் சிறிய சாட்சி நாகமானின் வாழ்வில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. எப்பெரிய ஆச்சரியம்! ஒரு சிறு வேலைக்காரப் பெண்ணின் சாட்சி, அதிலும் பெற்றோரிடமிருந்து தன்னைப் பிரித்துவிட்ட ஒருவனுக்குக் கூறிய சாட்சி@ ஒரு பெரிய படைத்தலைவனின் சரீரத்தை மட்டுமல்லாமல், அவனது ஜீவியத்தையே மாற்றிவிட்டது. அப் பெண், தான் சிறியவள், வேலைக்காரி என்று எண்ணி, அமைதியாய் இருந்திருப்பாளேயானால், இப்படியொரு சம்பவமே நிகழ்ந்திருக்குமோ என்னவோ!

தேவபிள்ளையே, அந்தச் சிறுமியின் உள்ளத்தில் பழியுணர்வு இருந்திருந்தால் இந்தச் சாட்சியை அவள் உரைத்திருக்கமாட்டாள். நம்மை வேதனைப்படுத்துகிறவர்கள் விடயத்திலே நமது மனநிலை எப்படிப்பட்டது? அவர்களுக்கு ஆபத்து நேரிடும்போது ~எனக்கென்ன| ‘நன்றாய் அனுபவிக்கட்டும்” என்று பேசாமல் இருக்கிறோமா? நான் வீட்டிலே சிறியவன்; சபையிலே கணக்கிடப்படாதவன்@ நான் தகுதியிலே குறைந்தவன் என்று மவுனமாக இருக்கிறோமா? நாம் என்ன நிலையிலிருந்தால் என்ன, நம்மை ஒடுக்கும் மேலதிகாரியானால் என்ன, துன்பப்படுத்தும் உறவினர் என்றாலென்ன, நம்மை புறக்கணிக்கும் சகோதரராயிருந்தால் என்ன, அவர்கள்மீது மனதுருகி, தகுந்த தருணத்தில் நாம் சொல்லும் சாட்சி, அது ஒரு சிறியதாக இருந்தாலும், பெரியதொரு அறுவடைக்கு நிச்சயம் வழிவகுக்கும். சரீர சுகத்துடன், ஜீவனுள்ள தேவனை ஆராதிப்பவனாக நாகமான் திரும்பிவந்தது அந்தச் சிறுபெண்ணுக்கு எத்தனை மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்! நாமும் அப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவிக்கவேண்டாமா?

? இன்றைய சிந்தனைக்கு:

எமக்கு தீங்குசெய்தவர்களுக்கும் இயேசுவைக்; குறித்து சாட்சியாகக் கூறி அன்பை விதைத்திருக்கின்றேனா?

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin