? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:43-45

நல்ல மரமும் நல்ல கனியும்

நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான். லூக்கா 6:45

தேவனுடைய செய்தி:

நல்ல மரமானது கெட்ட கனிகொடாது, கெட்ட மரமானது நல்ல கனிகொடாது.

தியானம்:

ஒவ்வொரு மரமும் அது கொடுக்கிற பழத்தினால் அறியப்படும். முட்செடிகளில் இருந்து மக்கள் அத்திப் பழங்களைச் சேர்ப்பதில்லை. புதர்களிலிருந்து திராட்சைப் பழங்களை அவர்கள் பெறுவதில்லை.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.

பிரயோகப்படுத்தல் :

நல்ல மரமானது கெட்ட கனிகொடாது? என்னிடம் நல்ல கனி உண்டா? அவற்றினால் மற்றவர்களுக்கு பிரயோஜனம் உண்டா?

நான் கெட்ட செயல்கள் செய்யும்படி தூண்டப்பட்டதுண்டா?

 நல்ல மனிதனின் இதயத்தில் எவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும்? அவன் இதயத்தில் இருந்து எவை வெளிப்படும்?

‘ஒருவனின் வாய் வழியே வெளிப்படும் வார்த்தைகள் அவனுடைய இதயத்தில் இருப்பவற்றின் வெளிப்பாடே’ என்பதைக் குறித்து சிந்தித்தது உண்டா?

எனது வாயின் வார்த்தைகள் எப்படிப்பட்டவை? அவை பிறரது காயங்களை ஆற்றுமா? அல்லது பிறரை காயப்படுத்துகின்றவைகளா?

இன்று இயேசு என்னிடம் எதிர்பார்ப்பது என்ன? நல்ல பொக்கிஷம் எது?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin