? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 15:8-14

நாம் ஜெயங்கொள்வோம்!

இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன். பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். ஆதியாகமம் 15:14

நமது வாழ்வு கடினமானதாக இருக்கலாம். ‘ஒரு பயங்கரமான எதிர்காலத்தை எதிர்கொள்ள உங்களுக்கு எங்கிருந்து தைரியம் கிடைக்கும்?” என்று ஒருவர் பில்லி கிரஹாமிடம் கேட்டார். அவர், ‘நான் வெளிப்படுத்தின விசேஷம் கடைசி அதிகாரத்தை வாசித்தேன். நாம் ஜெயம் கொள்ளுகிறோம்” என்றாராம்.

தேவன் ஆபிராமின் சந்ததியாரின் பாடுகளைக் குறித்து ஆபிராமிடம் கூறியபோது, அது அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தது. 400 வருஷங்கள் இன்னொரு தேசத்தில் அடிமைகளாக இருப்பார்கள் என்றார் கர்த்தர். ஆபிரகாமின் சந்ததியார் எகிப்தியரால் மோசமாய் நடத்தப்பட்ட காலத்தில் அவர்கள் எப்படிப் பொறுத்துக்கொண்டார்கள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? தேவனுடைய வாக்குத்தத்தத்தை நினைவுகூர்ந்ததாக அது இருக்கலாம். ‘நான் அவர்களை நியாயம் தீர்ப்பேன். என்னுடைய ஜனங்கள் மிகுந்த உடைமைகளுடன் அந்நாட்டைவிட்டு வெளியேறுவார்கள்”. அதாவது, முடிவில் தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேலர் ஜெயம் பெறுவார்கள் என்பதையே அது எடுத்துக் காட்டிற்று. ஆம். அவர்கள் வாழ்வில் கஷ்டங்களும் துன்பங்களும் இருக்கும்@ ஆனால், அவர்களைத் துன்பப்படுத்தியவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள். இஸ்ரவேலரோ, அவர்களிடமிருந்தே வெள்ளி, பொன், உச்சிதங்கள் எல்லாம் பெற்று மகிழ்வார்கள். இது ‘ஆகலாம்” என்ற சந்தேகச் சொல் அல்ல; தேவன் ஆபிரகாமிடம் கூறியதை அவன் நிச்சயமாக கண்டறியலாம்.

துக்கமோ துன்பமோ இன்றி ஒருவரும் இந்த உலக வாழ்வைக் கடந்துசெல்ல முடியாது.எமது வாழ்விலும் துக்கங்களும் துயரங்களும் நேரிடக்கூடும். ‘கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கித் கூப்பிடுவேன்? நீர் கேளாமலிருக்கிறீரே?” (ஆபகூக் 1:2) என்று ஆபகூக் போல நீங்களும் கேட்கலாம். வேதனையின் மத்தியிலும் மாறாத சத்தியத்தைப் பற்றிக்கொண்டிருப்போம். அங்கேதான் இறுதி வெற்றி கிடைக்கும்.

எமது நிகழ்காலம் எவ்விதமாக இருந்தாலும், எமது எதிர்காலம் பலவிதமான அச்சுறுத்தலைத் தந்தாலும், எமது நம்பிக்கை தேவனிடமே இருக்கின்றது. ஆகவே, இறுதியில் நாம் ஜெயங்கொள்ளுவோம் என்ற நிச்சயத்தை உடையவர்களாக நாம் திகழ முடியும். பயங்கர துன்பங்களை அனுபவிக்கும்போது இந்த வசனங்களைத் தியானியுங்கள்: 2கொரிந்தியர் 4:17-18; வெளிப்படுத்தல் 7:14-17, 21:4. எமது எதிர்காலம் மகிமையுடையதாய் இருக்கும் என்ற நம்பிக்கை, இக் காலம் நாம் அனுபவிக்கும் துன்பங்கள் பொறுத்துக்கொள்ளக்கூடியவை என்ற உணர்வைத் தரும்.

? இன்றைய சிந்தனைக்கு:

நீங்கள் இப்போது துன்பங்களுக்கூடாகச் சென்றாலும், இறுதியில், கர்த்தர் நமக்கு ஜெயம் தருவதால், வெற்றி நிச்சயமானதே!

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin