குறிப்பு-

வாசகர்களாகிய உங்களுடைய தியானத்திற்கென்று பிரதி சனிக்கிழமையை நாம் தெரிந்துள்ளோம். உங்கள் தியானத்திற்கு உதவியாக 1சாமுவேல் 29 ஐ வாசித்துத் தியானித்து, உங்கள் சிந்தனைகளை குறித்துக் கொள்ளுங்கள். நீங்களும் தியானிப்பதற்கான முயற்சிகளில் பயிற்சியெடுங்கள். பயன்பெறுங்கள். உங்கள் கருத்துக்களைத் தெரியப்படுத்துங்கள்.

? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி:  1சாமுவேல்  29:1-11

?  புறப்பட்டுப்போ

…இந்நாள் வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை… 1சாமுவேல் 29:3

? தியான பின்னணி:

இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாகிய சவுல், இஸ்ரவேலின் தேவனால் ராஜாவாக இராதபடி தள்ளப்பட்டான். ராஜாவாக வேண்டிய தாவீதோ, பெலிஸ்திய அதிபதியான அகீஸிடம் தங்கியிருந்தான். இப்போது யுத்தத்திற்கு தாவீது வராதபடிக்கு அவனை அனுப்பிவிட யோசனையாயிருந்தார்கள்.   

? பிரயோகப்படுத்தல் :

❓ ‘இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த தாவீது” என  பெலிஸ்திய அதிபதிகள் கூறியதன் காரணம் என்ன?

❓ இன்று நமது அடையாளம் என்ன?

❓ ‘சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம்” என்று இந்தத் தாவீதைக்குறித்து இஸ்ரவேலர் பாடியதை பெலிஸ்திய அதிபதிகள் அறிந்தது எப்படி?

❓ கிறிஸ்துவின் பிள்ளையாகிய நாமே, நம்மைக் குறித்து மறந்தாலும், எமது சத்துருவாகிய சாத்தான் நம்மை அறிந்தவனாக இருப்பதை, நாம் அறிந்துள்ளோமா?

❓ ‘வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ” என ஆகீஸ் தாவீதிடம் கூறியது ஏன்?

? தேவனுடைய செய்தி:

▪️ எமது வெளிச்சம் மற்றவர்கள் மத்தியில் பிரகாசிக்கவேண்டும்.

? விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

மற்றவர்கள் எம்மீது குற்றம் காணாதபடிக்கு, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை நான் பின்பற்றுவதோடு, எனது சாட்சியைக் காத்துக்கொள்வேன் என்ற உறுதி எனக்குள் அவசியமானது.

? எனது சிந்தனை குறிப்பு :

__________________________________________________________________________________________________________________________________________________________________________

? அனுதினமும் தேவனுடன்.

?♂️ எமது விலாசம்

Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532
Whatsapp: +94768336006

Solverwp- WordPress Theme and Plugin