📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 14:25-35
முதலில் திட்டமிடுங்கள்
உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? லூக்கா 14:34
தேவனுடைய செய்தி:
ஒருவன் இயேசுவைப் பின்பற்றும்போது அவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிலுவையை (துன்பத்தை) சுமக்காவிட்டால் அவன் சீஷனாக முடியாது.
தியானம்:
வேலையை முடிப்பதற்குத் தேவையான பணம் உங்களிடம் இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு போரை நடத்துவதற்கு முதலில் அமர்ந்து திட்டமிடவேண்டும். இல்லாவிட்டால் சமாதானத்திற்கான பேச்சு வார்த்தையில் அவ்வாறு செய்யவில்லை என்றால், நீங்கள் இயேசுவின் சீஷராக இருக்க முடியாது!
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
ஒருவன் தன்னை நேசிப்பதைக் காட்டிலும் அதிகமாக ஆண்டவராகிய இயேசுவை நேசிக்கவேண்டும்!
பிரயோகப்படுத்தல் :
ஒரு காரியத்தை முடிக்கத் திராணியில்லாமற்போனால் யார் யாருடைய பரியாசத்தை எதிர்கொள்ள நேரிடும் என்பதை அச்செயலில் சற்று உட்கார்ந்திருந்து சிந்தித்ததுண்டா?
ஆலோசனை பண்ணாமலிருப்பதால் ஏற்படக்கூடிய ஆபத்து என்ன?
கணக்கு பாராமலிருந்தால் ஏற்படக்கூடிய நஷ்டத்தை உணர்ந்ததுண்டா?
சாரமற்றுப்போன உப்பை ஏன் வெளியே கொட்டிவிடுகிறார்கள்? நான் யாருக்காவது பயனற்றவனாக போனால்… எனது நிலை என்ன? ஆகவே, இப்பொழுது நான் என்ன செய்யலாம்?
💫 இன்றைய எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.
