📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:43-48

வைத்தியர்களைவிட மேலானவர்

என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன். ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு… லூக்கா 8:46

தேவனுடைய செய்தி:

“என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்” – இயேசு.

தியானம்:

தன் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் குணமடையாமல், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய பெண், இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. அவள் பிணி நீங்கியதையும், இயேசுவின் வல்லமையினால் சுகம் பெற்றதையும் மக்கள் அனைவர் முன்னிலையிலும் அறிவித்தாள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இயேசு தருகின்ற சுகம், சமாதானம், இரட்சிப்பு எனக்கானதே.

பிரயோகப்படுத்தல் :

இயேசுவைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அந்த பெண் கூறிய சாட்சி எப்படிப்பட்டது?

திரளான மக்கள் கூட்டம் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருந்தபோதிலும், இயேசு தம்மை தொட்ட அவளை அறிந்துகொண்டது எப்படி? விசுவாசத்துடன் நாம் அவரது வல்லமையைப் பெற்று சுகத்தைப் பெற்றதுண்டா?

“என்னைத் தொட்டது யார்?” என்று இயேசு கேட்டது ஏன்? அதற்கு பேதுரு வின் பதில் என்ன? இன்று கிறிஸ்தவர்கள் இயேசுவின் கேள்விகளுக்கு பேதுருவைப்போலவா பதிலளிக்கிறார்கள்?

இயேசுவுக்கு முன் இனியும் நாம் மறைந்திருக்க முடியுமா? இயேசுவுக்குள் நம் விசுவாசம் நம்மை இரட்சித்ததுண்டா? சமாதானம் பெற்றதுண்டா?

💫 இன்றைய எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *