? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: ஆதியாகமம் 15:1-2

பயப்படாதே!

ஆபிராமே, நீ பயப்படாதே. நான் உனக்குத் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். ஆதியாகமம் 15:1

எல்லோரிடமும் ஏதோவித பயம் இருக்கிறது. தைரியசாலிகள்போல சிலர் தெரிந்தாலும், அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்றால் தாம் பயந்த வேளைகளைக்குறித்து கூறுவார்கள். இரண்டாம் உலகப் போரின்போது, ஒரு இராணுவ கவர்னர், ஜோர்ஜ் பேற்றன் என்னும் ஜெனரலைச் சந்தித்து, பேற்றனின் தைரியத்தையும், வீரத்தையும் புகழ்ந்துரைத்தார். அதைக் கேட்ட பேற்றன், ‘ஐயா, நான் தைரியசாலி அல்ல. உண்மையைச் சொன்னால், நான் ஒரு கோழை. நான் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்குமிடத்தில் கூட நின்றதில்லை. ஒரு தடவைகூட ஒரு யுத்தம் நடப்பதைப் பார்த்ததில்லை” என்றார். பேற்றனின் நேர்மையும், உண்மைத்துவமும் பாராட்டுக்குரியவை. ஆனால் நமது பயங்களுக்கு தேவன் நல்ல ஒரு தீர்வைத் தந்திருக்கின்றார்.

நம்மைப்போல ஆபிராமும் ஒரு மனிதனே. அவனுடைய சொந்த குடும்ப சேனையில் 318 நல்ல போர்செய்யக்கூடிய வீரர்கள் இருந்தனர். அவர்கள் நான்கு பெரிய ராஜாக்களை வெற்றிபெற்றிருந்தார்கள் (ஆதி.14:13-17). ஆனாலும் ஆபிராமுக்கு இன்னும் பயமும் திகிலும் இருந்தது. ஆகவேதான் தேவன் ஆபிராமைப் பலப்படுத்தினார். ‘நான் உனக்குக் கேடகமும் உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்” என்றார். ‘உனக்கு மிகப்பெரிய பெலன்” என்பது, ‘உனது தேவைகளையெல்லாம் சந்திப்பேன், எனவே நீ பயப்படத்தேவையில்லை” என்று பொருள்படும்.

நமது பயங்கள் இரண்டு விதமானவை. நமக்கு ஏதோ துன்பம் வரும் என்று  பயப்படுகிறோம்; அல்லது, அவசியத் தேவைகள் நம்மைச் சந்திக்கும் என்று நினைப்போம். இவை இரண்டுக்கும் தேவன், ‘நான் போதும்” என்கிறார். ‘வலதுபுறத்தில் பதினாயிரம் பேர் விழுந்தாலும் அது உன்னை அணுகாது” என்றும், ‘சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையும் குறைவுபடாது” என்றும் வேதாகமம் கூறுகிறது. தேவனுடைய பிள்ளை களாகிய நாம் தேவனிடத்தில் வாஞ்சையாயிருக்கின்றபடியினால், கர்த்தர்தாமே அவனை விடுவிப்பார். கர்த்தருடைய நாமத்தை நாம் அறிந்திருப்பதினால், அதைப் புகலிடமாக்கிக் கொள்வதினால், நிச்சயமாக கர்த்தர் நம்மை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பார். இன்று உங்களைத் துன்பப்படுத்துவது எது? நமது பயங்களைத் தூர எறிந்துவிட்டு கர்த்தரை நம்புவோம். ஆபிராமின் தேவன், நம்மைப் பாதுகாப்பதற்கும், நமது தேவைகளைச் சந்திப்பதற்கும் போதுமானவர். எனவே பயமும் கவலையும் வேண்டாம். உன்னதமான கர்த்தரை எமது தாபரமாகக் கொள்வோமாக.  அவரது செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவோமாக.

? இன்றைய சிந்தனைக்கு:

எனக்குள் வேதனைதரும் பயம் எது? இன்றே அந்தப் பயத்தைத் தள்ளிவிடுவேனா? தேவன் என்னுடன் இருக்க பயமேன்?

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin