? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: 1சாமு 31:1-6

ஒரு ராஜாவின் மரணம்

பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி,…  1சாமுவேல் 31:1

தேவனுடைய செய்தி:

தேவன் தெரிந்துகொண்ட நபராக, ஒரு ராஜாவாக இருந்தாலும், அவன் கர்த்தரை விட்டுவிட்டால், அவனது முடிவு பரிதாபமே.

தியானம்:

இஸ்ரவேலரோடு யுத்தம் செய்த பெலிஸ்தியர்கள் அநேகரை வெட்டி கொன்றுபோட்டார்கள். சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது. சவுல்  ஒரு பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்து செத்துப்போனான். அதைக் கண்ட அவனது ஆயுததாரியும் அப்படியே செய்தான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

சுய பெலத்தினால் நாம் யுத்தத்தில் ஜெயம்பெற முடியாது.

பிரயோகப்படுத்தல் :

யுத்தம் நடந்த அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப் போனதற்கு காரணம் என்ன?

வில்வீரரால் மிகவும் காயப்பட்ட சவுல் எதற்குப் பயப்படான்? மரணத்தைக் குறித்த எமது மனப்பான்மை என்ன?

‘விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை  அவமானப்படுத்தாதபடிக்கு” என்ற சவுல் ராஜா பயந்தான். தேவனை நோக்கிப் பாராதபடியினால் நாம் அவமானப்பட நேர்த்ததுண்டா?

‘பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்த சவுலின் செயல்| ஏன் தவறானது? திடீரென வீசும் புயலில் நடுங்கி, மரணத்தை வரவேற்பது சரியா? தேவன் ஏன் அவனைக் காப்பாற்றவில்லை? என நினைக்கிறீர்கள்?

எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532


? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin