📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 7:18-23

துன்பத்திலும் துணை அவரே

…என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். லூக்கா 7:23

தேவனுடைய செய்தி:

இரட்சகராகிற இயேசு கிறிஸ்துவை தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பாக்கியவான்கள்.

தியானம்:

“வர இருப்பவர் நீர்தானா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா?” என யோவான் கேட்டதாக அவனது சீடர்கள் இயேசுவிடம் வந்து கேட்கின்றார்கள். அந்நேரத்தில் பிணிகளையும் நோய்களையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த பலரை இயேசு குணமாக்கினார், பார்வையற்ற பலருக்குப் பார்வை அருளினார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இயேசு அறிவிப்பது நமது கடமை.

பிரயோகப்படுத்தல் :

இவற்றைக் குறித்து சிந்தியுங்கள்:

 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்,

கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்,

தொழுநோயாளிகள் நலமடைகின்றனர்,

காது கேளாதோர் கேட்கின்றனர்,

இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுகின்றனர்,

ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகின்றது.

நீங்கள் கண்டவற்றையும் கேட்டவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள் (7:22) இன்று நமது பணி என்ன?

“வருகிறவர் நீர்தானா?” என யோவான் மேசியாவைக் குறித்து சிந்தித்தபடி இன்றைய மக்கள் சிந்திக்கின்றார்களா? அவர்கள் இயேசுவை அறிந்து கொள்ள நாம் என்ன செய்யலாம்? என்ன செய்கின்றோம்?

💫 இன்றைய எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (188)

  1. Reply

    clomid dosage Clients who want to use an FSA HSA account for Helix MWR expenditures, but cannot, due to the fact that a receipt of estimates is not accepted, are required to not use Helix MWR for HSA FSA expenditures.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *