? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 3:1-6

பாலைவனத்தில் ஒரு குரல்

மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்…
லூக்கா 3:5 3:1-6

தேவனுடைய செய்தி:

கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்.

தியானம்:

400 வருடங்கள் ஒரு தீர்க்கதரிசியும் தேவன் அனுப்பாது, ஒரு மௌன காலத்திற்குப் பின்பு, தேவனது வார்த்தை யோவானுக்கு வனாந்திரத்தில் உண்டாயிற்று. அதன்பின் யோவான் தனது பணியை ஆரம்பித்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும்.

பிரயோகப்படுத்தல் :

  • வசனம் 1-2ல் பெயர்பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்களின் எண்ணிக்கை யாது? அவர்கள் யார்? அவர்களது தொழில் யாது?
  • மாம்சமான யாவரும்… என யாரை யோவான் குறிப்பிடுகிறார்?
  • ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிற வசனத்திலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்கின்றோம்?
  • கிறிஸ்துவின் வருகையானது, எல்லாவற்றிற்கும் நிறைவும் பூரணத்துவத்தையும் கொடுப்பதால், இன்று பழைய ஏற்பாடு அவசியம் இல்லை எனக் கூறுபவர்களைக் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
  • வசனம் 6ன்படி, ஏன் யோவான் தனது பணியை, ‘யோர்தான் நதிக்கு அருகே” ஆரம்பிக்கிறார் என கருதுகிறீர்கள்?
  • இன்று நீங்கள் மனந்திரும்ப வேண்டிய பாவங்கள் உங்கள் வாழ்க்கையில் உண்டா?

? இன்றைய எனது சிந்தனை:

? எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Comments (13)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *