22 மே, 2021 சனி

? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:12-16

அப்போஸ்தலர்களைத் தேர்ந்தெடுத்தல்

அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.லூக்கா 6:13

தேவனுடைய செய்தி:

சீஷர்களை அழைத்த இயேசு அவர்களுள் பன்னிரண்டு பேரைத் தேர்ந்தெடுத்தார்.

தியானம்:

இயேசு பிரார்த்தனை செய்யும்பொருட்டு ஒரு மலைக்குச் சென்றார். இரவு முழுவதும் தேவனிடம் பிரார்த்தனை செய்தவாறே அம்மலையில் இருந்தார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

முக்கியமான காரியத்திற்காக நாம் தேவனிடம் மன்றாட வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

இயேசு ஜெபம்பண்ணும்படி என்ன செய்தார்? எவ்வளவு நேரமாக அவர் ஜெபம் பண்ணினார்?

வசனம் 13ன்படி, எதற்காக தேவனை நோக்கி ஜெபம்பண்ணினார்?

பன்னிரண்டு பேருக்கு இயேசு வைத்த பெயர் என்ன?

உங்கள் வாழ்வில் நீங்கள் எதையாகிலும் செய்வதற்காக ஜெபம் செய்ய ஆயத்தமாக இருக்கின்றீர்களா? ஜெபித்துவிட்டு அக்காரியத்தை செய்ததுண்டா?

இயேசு தெரிந்தெடுத்த 12 பேரின் பெயர்கள் என்ன? இயேசு சீமோனுக்கு சூட்டிய பெயர் என்ன?

வசனம் 16ன்படி, யூதாஸ் குறித்து கூறப்படுவது என்ன?

? இன்றைய சிந்தனைக்கு:

? அனுதினமும் தேவனுடன்.

3,706 thoughts on “22 மே, 2021 சனி