📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 12:22-34
கவலை வேண்டாம்
என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள்… லூக்கா 12:22
தேவனுடைய செய்தி:
தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
தியானம்:
என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவை.
பிரயோகப்படுத்தல் :
நமக்கும் நமது குடும்பத்திற்கும் தேவையானவற்றைச் சேர்ப்பது தவறா?
இல்லையென்றால் அதிகமாக சேர்த்து வைப்பது தவறா? யாருக்கு தேவன் பரலோக ராஜ்யத்தைக் கொடுக்க ஆவலுள்ளவராக இருக்கின்றார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய சிந்தனை என்னவாக இருந்தது?
பிறருக்கும் தேவனுக்கும் எவ்வளவு அதிகம் கொடுக்கலாம் என்று கருத்தாக இருப்பது யாருடைய சிந்தனை? அப்படிப்பட்டவர்கள் யாருடையவர்கள்?
இன்று நான் கொடுத்தலில் எப்படி, கொடுக்க முடியாமல் இருக்கின்றேனா?
வசனம் 33ன்படி, உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சை கொடுங்கள் என்ற கட்டளையின் பெறுமதியை உணர்ந்துள்ளீர்களா? நீங்கள் இப்படிச் செய்ததுண்டா?
உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும் என்றார் இயேசு. பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வைத்துள்ளீர்களா?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.

buy cc and dumps
trực tiếpbóng đá hôm nay
jetsadabet
pgslot99th
nova88
Aşk Chat