📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 17:11-19
நன்றியறிதல்
அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்தினான். அவன் சமாரியனாயிருந்தான். லூக்கா 17:16
தேவனுடைய செய்தி:
தேவன் மீதுள்ள உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.
தியானம்:
இயேசுவிடம், “ஐயரே, எங்களுக்கு இரங்கும்” என்று சத்தமிட்ட பத்துக் குஷ்டரோகிகள் வழியில் குணமடைந்தார்கள். அதில் சுகம் பெற்ற ஒருவன் இயேசுவிடம் மீண்டும் வந்து, உரத்த குரலில் தேவனுக்கு நன்றியைத் தெரிவித்தான். சுகம்பெற்ற மற்ற ஒன்பது பேர் திரும்பி வராதநிலையில், இந்த சமாரியன் மாத்திரம் தேவனை மகிமைப்படுத்தினான்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, இயேசுவின் பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ் செலுத்திய சமாரியனைப் போல நாமும் இயேசுவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கவேண்டும்.
பிரயோகப்படுத்தல் :
குஷ்டரோகிகள் கிராமத்தின் வெளியே நின்று உதவிகேட்டது ஏன்? ஏன் இயேசு அவர்களை ஆசாரியரிடம் காண்பிக்கும்படி கூறினார்?
தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தியவன் யார்? எப்படி மகிமைப்படுத்தினான்?
வசனம் 16ன்படி, சுகம்பெற்ற சமாரியன், யாருடைய பாதத்தருகே முகங்குப் புற விழுந்து, ஸ்தோத்திரஞ் செலுத்தினான்? அவர் எப்படிப்பட்டவர்?
இன்று பிறர் எனக்குச் செய்கின்ற உதவிகளுக்கு நான் நன்றியறிதல் உள்ளவனாக இருக்கின்றேனா? முதலில் ஆண்டவரை எனது வாழ்வில் நான் மகிமைப்படுத்துகின்றேனா?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.