? சத்தியவசனம் – இலங்கை. ?? 

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 1:46-58

மரியாளின் பாடல்

?  பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி,  ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். லூக்கா 1:53

?  தேவனுடைய செய்தி:

தேவனுடைய சித்தத்தையும் திட்டத்தையும் நாடி அதற்குக் கீழ்ப்படியும் போது, மகத்தான சந்தோஷமும் திருப்தியும் ஏற்படும்.

?  தியானம்:

தேவனது மூன்று குணாதிசயங்களை மரியாள் கூறுகின்றார். அவை எவை?

 1. ப……………….. (வச 49)         2. இ……………….. (வச 50)         3. ப……………….. (வச 51)

?  விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் இரக்கமாயிருக்கும் மக்கள் யார்?

1. பய……………….. (வச 49).  2. இ……………….. (வச 50)            3. ப……………….. (வச 51).

?  பிரயோகப்படுத்தல் :

  • எலிசபெத் வயதான காலகட்டத்தில் கர்ப்பந்தரித்தும், மரியாள் கன்னியாயிருக்கும்போதே கர்ப்பந்தரித்திருந்தும் ~களிகூருவதின்| இரகசியம் என்ன?
  • வசனம் 47ல், ‘என் இரட்சகராகிய தேவனில்” என மரியாள் கூறுவதில் நீங்கள் விளங்கிக் கொள்வது என்ன?
  • வசனம் 53 ல், பணக்காரரை தேவன் தள்ளிவிடுவாரா? பசியுள்ளவர்கள், ஐசுவரியவான்கள் என யாரைக் குறிப்பிடுகின்றார்?
  • தனது வசதி, நலன், சௌகரியத்தைவிட எலிசபெத்தின் நலனில் அக்கறையை சரீர ரீதியில் மட்டுமல்ல, வார்த்தையிலும் ஆவிக்குரிய ரீதியிலும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தியதுபோல, நீங்கள் வரும் நாட்களில், யாரை தேவ வார்த்தையின்படி உற்சாகப்படுத்தப் போகிறீர்கள்?

? எனது சிந்தனை:

?️ எமது விலாசம்
Back to the Bible (Sathiyavasanam),
120 A, Dharmapala Mawatte, Colombo 7, Srilanka.
Email: sathiyavasanam@backtothebible.lk
website: Backtothebible.lk  |  www.Sathiyavasanam.lk
Facebook: www.fb.com/sathiyavasanam
Call: 011-4691500 | 011- 4691532

? அனுதினமும் தேவனுடன்.

Comments (1)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *