📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 8:11-15

விதைப்பவனின் உவமை

…அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலேகாத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாய் இருக்கிறார்கள். லூக்கா 8:15

தேவனுடைய செய்தி:

விதை தேவனுடைய வசனம்.

தியானம்:

தேவ வார்த்தை எனும் விதைகள் மனித இதயங்களில் விதைக்கப்பட்டன. சில வழியோரம் விழுந்து மிதிபட்டன, ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. சில கற்பாறையின் மீது விழுந்தன, அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின. சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன, கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன. இன்னும் சில விதைகளோ நல்ல இருதயம் எனும் நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் பலன்கொடுப்பார்கள்.

பிரயோகப்படுத்தல் :

தேவ வார்த்தைகளைக் கேட்டபோதிலும், அதை நம்பி மீட்புப் பெறாதவாறு பிசாசானவன் வந்து உள்ளத்திலிருந்து வார்த்தையை எடுத்துப்போடுகிறான். இவர்களின் இருதயம் எந்த நிலமாக உள்ளது?

தேவ வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டா லும், வேரற்றவர்கள் போல, சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டு விடுகிறவர்களாக, சிறிது காலமே அவ்வார்த்தையை நம்பும் இருதயம் உள்ளவர்கள் எந்த நிலமாக உள்ளனர்?

தேவ வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களின் இருதயம் எந்த நிலமாக உள்ளது?

சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களின் இருதயம் எந்த நிலமாக உள்ளது?

💫 இன்றைய எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (91)

  1. Pingback: angry birds sex games

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *