📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:7-9

புயல் வரக் காரணம் என்ன?

…சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன்… யோனா 1:9

தேவனுடைய செய்தி:

நீரையும் நிலத்தையும் படைத்த விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரிடம் நாம் பயபக்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

தியானம்:

கப்பலில் இருந்தவர்கள், “நமக்கு இந்தப் பெரும் தீங்கு யாரால் வந்தது என்று கண்டறியச் சீட்டுக் குலுக்குவோம்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டார்கள். அவ்வாறே அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள்.சீட்டு யோனாவின் பெயருக்கு விழுந்தது.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தர் சிருஷ்டிகர் என்பதை நான் விசுவாசிக்க வேண்டும். அதைப் பிறருக்கு உணர்த்துபவனாக வாழவேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

யார் குற்றவாளி என்பதைக் கண்டுபிடிக்க அவர்கள் என்ன செய்தார்கள்?

“யோனாவால் இந்தத் துன்பம் வந்தது” என்பதைக் கப்பலில் இருந்தவர்கள் உணர்ந்தபோது அவர்கள் கேட்ட கேள்விகள் என்ன? இன்று மக்கள் உங்களிடம் கேட்கும் கேள்விகள் யாது?

வசனம் 9ன்படி, நீங்கள் யார்? யாராவது உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? யோனா சொன்னது சரியா?

மனிதர்கள் தங்களுடைய சொந்த தெய்வங்களைக் கொண்டிருந்தபோதும்ஏன் மிகவும் பயந்தார்கள்? மெய்யான தெய்வத்தை பின்பற்றும் நாம், ஏன் அவரிடத்தில் பயபக்தியற்றவர்களாக இருக்கிறோம்?

எனது குற்றத்தால்தான் என்னுடன் இருக்கின்ற மற்றவர்களுக்கு ஒரு பயங்கரமான துன்பம் ஏற்பட்டால், நான் என்ன செய்ய வேண்டும்?

ஜீவனுள்ள தேவனைக் குறித்து இன்று எனது மனப்பான்மை என்ன?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

2 thoughts on “2023 மார்ச் 25 சனி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin