📖 சத்தியவசனம் – இலங்கை.
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:4-6
பெரும்புயல்
…எழுந்திருந்து உன் தேவனை நோக்கிவேண்டிக்கொள். நாம் அழிந்து போகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார்… யோனா 1:6
தேவனுடைய செய்தி:
கீழ்ப்படியாத ஒரு பாவியைக் குறித்துத் தேவன் துக்கமடைகின்றார்.
தியானம்:
கடலில் கடுங்காற்று வீசும்படி கர்த்தர் செய்தார். கப்பல் உடைந்துபோகும் நிலையில் இருந்தது. யோனாவோ ஏற்கெனவே கப்பலின் அடித்தட்டுக்குப் போய்ப் படுத்து அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
தேவனுக்குக் கீழ்ப்படிதல் மிக அவசியமானது.
பிரயோகப்படுத்தல் :
யோனா செய்த காரியத்தைக் குறித்து தேவனின் எதிர்வினை என்ன? விளைவு என்ன?
யோனாவுக்கும் மாலுமிகளுக்கும் என்ன வித்தியாசம்? விஷயங்களை மாற்ற முயற்சிக்க மாலுமிகள் என்ன செய்தார்கள்?
யோனா என்ன செய்ய வேண்டும் என்று மாலுமி நினைத்தார்?
இன்று நான் செய்யத்தகுந்த காரியம் என்ன? இன்று திருச்சபைக்கு வருகின்ற புதிய நபர்களை நான் எப்படி கண்ணோக்குகின்றேன்?
மற்றவர்கள் தங்கள் தெய்வங்களை வழிபடுவதற்கும், உயிர்த்தெழுந்த ஆண்டவரை நாம் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை உணர்ந்திருக்கின்றேனா?
“ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? உனது தேவனிடம் ஜெபம் செய். ஒரு வேளை உனது தேவன் உன் ஜெபத்தைக் கேட்டு நம்மைக் காப்பாற்றலாம்” என பிறமதத்தவர் உங்களிடம் கூறியதுண்டா?
எனது சிந்தனை:
📘 அனுதினமும் தேவனுடன்.