📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 1:4-7

தேவனிடம் ஜெபம் செய்!

நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கிவேண்டிக்கொள். யோனா 1:6

தேவனுடைய செய்தி:

மெய்யான தேவனிடம் எமது மன்றாட்டை ஏறெடுக்க வேண்டும்.

தியானம்:

கடலுக்குள் சரக்குகளைத் தூக்கி எறிந்த படகோட்டிகள் மிகவும் பயந்தார்கள். அவர்கள் தம் தம் தெய்வத்தை நோக்கி மன்றாடினார்கள். மெய் தேவனை வழிபட்ட யோனாவோ அசட்டையீனமாக தன் குற்றத்தை உணராதவனாக காணப்பட்டான்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனுக்குக் கீழ்ப்படிதல் மிக அவசியமானது.

பிரயோகப்படுத்தல் :

யோனா ஜெபம் செய்யாமல் இருந்ததற்கு காரணம் என்ன? இன்று எனது ஜெப நேரம் குறைவதற்கான காரணம் என்னவாக இருக்கின்றது?

“தேவனிடம் ஜெபம் செய். அவர் உன் ஜெபத்தைக் கேட்பார்” என்ற இந்த நிச்சயம் இன்று உங்களிடம் உண்டா?

“ஒவ்வொருவரும் தனது தேவனிடம் ஜெபம் செய்யத் தொடங்கினார்கள்.” இதைக் குறித்த சரியான மனப்பான்மை என்னிடமுண்டா? இன்று உங்கள் ஜெபத்தைக் கேட்பவர் யார்?

கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அதிலிருந்த சரக்குகளைக் கடலில் தூக்கியெறிந்தமைக்கான காரணம் என்ன?

படகு மூழ்குவதிலிருந்து காப்பாற்ற யோனா முயற்சிக்காதது ஏன்? அழிந்து போகின்ற தமது நண்பர்களைக் குறித்து இன்று கிறிஸ்தவர்கள் அக்கறையற்றவர்களாக இருக்கின்றார்களா? 

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin