2023 ஜுன் 24 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோனா 3:6-11

உன் பார்வையை மீண்டும் பெறு

தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, …சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.யோனா 3:10

தேவனுடைய செய்தி:

தேவன் தமது அன்பையும் இரக்கத்தையும் தெளிவுபடுத்துகிறார்.

தியானம்:

வேகமாக வளர்ந்த செடியை ஒரு பூச்சி தின்னத் தொடங்கியது. உஷ்ணமான கீழ்க்காற்றும் வெயிலும் யோனாவுக்கு எரிச்சலைத் தந்தது. நான் சாகிறது நல்லது என்ற அவனிடம், நினிவே மாநகருக்கு நான் இரக்கம் காட்டாமல் இருப்பேனா? என்றார் ஆண்டவர்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

கர்த்தரும் அவரது வார்த்தைகளுமே நமக்கு வாழ்வைத் தரும்.

பிரயோகப்படுத்தல் :

இன்று வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத மக்கள் யார்? அவர்களைக் குறித்த எனது பொறுப்பு என்ன?

வசனம் 10ல் யோனாவைப் புரிந்துகொள்ள கர்த்தர் என்ன செய்தார்? அதாவது, கர்த்தர் யோனாவின் இரக்கமின்மையை சரிசெய்தாரா?

வசனம் 11ல், தேவனுடைய அன்பை கவனிப்பைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? நினிவே மக்களைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

ஊழியம் என்பது நமது சுயநலமா? தேவனுடைய தியாக அன்பா? எதை வெளிப்படுத்துகின்றது?

“நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோகிறதுமான” உலக செல்வங்களுக்காக இன்று நான் பிரயாசப்படுவது ஏன்?

தேவனுடைய கேள்விக்கு, யோனாவின் பதில் இல்லாதது, அவர் விஷயத்தைப் புரிந்துகொண்டார் என்பதைக் குறிக்கிறது. நாம் நம்மை முழுமையாகப் புரிந்துகொள்வது எப்போது?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

9 thoughts on “2023 ஜுன் 24 சனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin