2023 ஏப்ரல் 13 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : 1கொரி 15:1-8

அவர் உயிர்த்தெழுந்தார்!

கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 1கொரிந்தியர் 15:3,4

உயிரோடெழுப்பப்பட்ட லாசரு, பின்பு மரித்திருப்பான்; நாயீன் ஊர் விதவையின் மகனும் பின்பு இறந்திருப்பான். அற்புதமாக எழுப்பப்பட்ட யாவரும் பின்பு மரித்துப்போனார்கள். ஆனால், உயிர்த்த இயேசுவோ மீண்டும் மரிக்கவுமில்லை, மரிப்பதுமில்லை. அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள். தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார் (அப்.2:23,24) என்று பரிசுத்த ஆவியானவரால் நிரம்பி, முழங்கிய பேதுரு, “இயேசுவை உயிரோடெழுப்பியது தேவனாகிய கர்த்தரே” என்று ஆணித்தரமாக அறிக்கைபண்ணினார். தேவனால் எழுப்பப்பட்டவர், நித்தியமானவர், அவருக்கு இனி மரணம் இல்லை. மரணம் அவரைக் கட்டுப்படுத்த முடியாது.

ஆம், அவர் இன்றும் ஜீவனுள்ள ஆண்டவராய் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். நாம் ஆராதிப்பவர், “ஜீவனோடிருக்கிறார்” என்று நிரூபிக்கப்பட்ட தேவனாவார்; நாம் பாவத்தை வெறுத்து உண்மைத்துவமுள்ளவர்களாய் ஜீவிப்பதற்கு இந்த ஒரு விசுவாசம் போதுமே! “மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும் அவரே”, ஆம், இயேசு ஒரு முழு மனிதனாகவே உலகுக்கு வந்தார். “பரிசுத்தமுள்ள ஆவியின் படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார் (ரோம.1:5) என்று எழுதிய பவுல், இயேசுவோடு வாழவுமில்லை, சீஷர்களைப்போல இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்ததையோ, உயிர்தெழுந்ததையோ நேரில் காணவும் இல்லை. உயிர்த்த இயேசுவோ, மகதலேனா மரியாளுக்கும், பேதுருவுக்கும், மற்ற சீஷருக்கும், பின்னர் ஐந்நூறு பேருக்கும் அதிகமான சகோதரருக்கு ஒரேவேளையிலே தரிசனமானார். உயிர்த்தெழுந்த இயேசுவைக் கண்டவர்களில் அநேகர் பவுல் காலத்திலும் ஜீவித்திருந்தனர். சிலர் மரித்துப்போயினர். அப்படியானால் பவுல் இவ்விதமாக உறுதியாக எழுதியது எப்படி? ஆம், உயிர்த்த இயேசுவை பவுல் சந்தித்த சம்பவத்தை அப்.9 ம் அதிகாரத்தில் நாம் வாசிக்கலாம். ஆம், பவுல், உயிரோடிருக்கும் இயேசுவின் கண்கண்ட அனுபவ சாட்சி. அதனால்தான் அவருடைய வார்த்தைகள் அத்தனை ஆணித்தரமானவை.

இயேசுவின் உயிர்தெழுதல் உலகம் கண்டிராததும், இனியும் காணமுடியாததுமான ஒரு சரித்திர நிகழ்வு. தாம் சேவிக்கும் ஆண்டவர் உயிரோடிருக்கிறார் என்று வாழ்ந்து காட்டுகிறவர்களும் இன்று ஏராளம். இதில் நாம் யார்? ஆனால், நாள் ஒன்று உண்டு. ராஜாதி ராஜாவாக, நீதியுள்ள நியாயாதிபதியாக கிறிஸ்து மீண்டும் வரும்போது, அவர் வாழுகின்ற கிறிஸ்து என்பது நிரூபணமாகும். ஆகவே, இன்றே உயிர்த்த இயேசுவுக்குச் சாட்சிகளாக வாழ நம்மை அர்ப்பணிப்போமாக!

💫 இன்றைய சிந்தனைக்கு:  

மரணத்தை ஜெயித்து உயிரோடெழுந்த இயேசுவை நமது வாழ்வில் பிரதிபலிப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

📘 அனுதினமும் தேவனுடன்.

42 thoughts on “2023 ஏப்ரல் 13 வியாழன்

  1. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  2. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

  3. 260440 285764Excellent paintings! This really is the kind of info that need to be shared around the web. Disgrace on Google for now not positioning this publish upper! Come on over and talk over with my web site . Thanks =) 172192

  4. Read reviews and was a little hesitant since I had already inputted my order. or else but thank god, I had no issues. the same as received item in a timely matter, they are in new condition. blue jays so happy I made the purchase. Will be definitely be purchasing again.
    cheap jordan shoes

  5. Разрешение на строительство — это административный письменное удостоверение, выписываемый официальными инстанциями государственного аппарата или субъектного управления, который разрешает начать возведение или осуществление строительных операций.
    Выдача разрешения на строительство задает законодательные основы и регламенты к возведению, включая допустимые категории работ, приемлемые материалы и подходы, а также включает строительные стандарты и пакеты безопасности. Получение разрешения на строительство является необходимым документов для строительной сферы.

  6. Быстромонтируемые строения – это современные системы, которые отличаются высокой скоростью установки и мобильностью. Они представляют собой здания, образующиеся из предварительно сделанных составляющих или компонентов, которые могут быть быстро установлены в месте развития.
    Здания из сэндвич панелей отличаются гибкостью также адаптируемостью, что позволяет легко менять а также переделывать их в соответствии с интересами заказчика. Это экономически результативное и экологически надежное решение, которое в последние годы приобрело обширное распространение.

  7. Быстровозводимые здания – это новейшие конструкции, которые различаются великолепной скоростью установки и гибкостью. Они представляют собой постройки, заключающиеся из предварительно изготовленных составляющих либо узлов, которые имеют возможность быть быстро установлены в месте развития.
    [url=https://bystrovozvodimye-zdanija.ru/]Стоимость быстровозводимых зданий из сэндвич панелей[/url] располагают гибкостью а также адаптируемостью, что дозволяет просто изменять а также модифицировать их в соответствии с потребностями клиента. Это экономически успешное и экологически долговечное решение, которое в последние годы приняло широкое распространение.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin