2023 ஏப்ரல் 10 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை.

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 24:1-9

வாக்குமாறாத தேவன்!

கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. 1கொரிந்தியர் 15:14

ஒரு புகையிரதப் பயணத்தின்போது, அருகில் இருந்த ஒரு வாலிபனிடம் மெதுவாக பேச்சுக் கொடுத்தேன். பிற மதத்தைச் சேர்ந்த அவன், என்னை இடைமறித்து, ஒரு கேள்வி கேட்டான்: “உங்கள் இயேசு ஒரு மனிதன் இல்லையா?” வரலாற்றில் பிறந்து மரித்த ஒரு மனிதனே – இயேசு என்பதே இன்றும் பலருடைய வாதம். ஆனால், வரலாற்று சத்தியம் அத்துடன் முடியவில்லை; அவர் மரித்து மூன்றாம் நாள் உயிரோடே எழுந்து, பரத்துக்கு ஏறி, பிதாவின் வலதுபாரிசத்தில் இன்றும் ஜீவனுள்ளவராய் வீற்றிருக்கிறார். இது வேதசத்தியம்.

“இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறதேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார்” என்றார் (மாற்.10:33-34). இயேசு உலகில் வாழ்ந்திருந்தபோதே, மூன்று தடவைகளாக தமது மரணம் உயிர்தெழுதலைக்குறித்து தமது சீஷர்களுக்குக் கூறியிருந்ததை மாற்கு 8,9,10 ம் அதிகாரங்களில் வாசிக்கலாம். கிறிஸ்துவின் சரீர உயிர்தெழுதலே நமது கிறிஸ்தவ விசுவாசத்தின் மையக்கரு. அவர் ஒரு முழு மனிதனாக வாழ்ந்திருந்தபோது அவர் அளித்த வாக்குத்தத்தம், அவர் உயிர்தெழுதலில் நிறைவேறியது. அதுமாத்திரமல்ல, இதனால் அவர் வாக்குமாறாத தேவன் என்றும் அறிந்துகொள்கிறோம். இந்த உயிர்தெழுதல், இயேசுவின் வாழ்வையும் வார்த்தைகளை யும் நமக்கு உறுதிப்படுத்தியிருக்கிறது. லாசரு உயிரோடு எழுப்பப்படுவதற்கு முன்னரே, இயேசு, “நானே உயிர்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றாரே; ஆம், அவருடைய உயிர்தெழுதல் இதை நிரூபணமாக்கியது.

“உலகில் மக்கள் தமக்குகந்த தெய்வங்களை, நம்புகிறார்கள், வணங்குகிறார்கள். அது அவரவர் தெரிவு. ஆனால், உன் தவறுகள் குற்றங்களை நீ பிறப்பதற்கு முன்னரே தம்மேல் சுமந்து, அதன் தண்டனையாகிய கொடூர சிலுவை மரணத்தைத் தாமே ஏற்று,

உன் இடத்திலே தாம் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, சொன்னபடியே மூன்றாம் நாள் உயிரோடெழுந்து, உன் வாழ்வுக்கு நம்பிக்கை தந்த ஒரு தேவனை உன்னால் காட்ட முடியுமா?” என்று அந்த வாலிபனிடம் கேட்டபோது, அவன் புன்சிரிப்புடன் தலையசைத் தான். ஆம், பிதாவின் சித்தத்தை சிரமேற்கொண்டு, நமது பாவங்களுக்குத் தாமே பலியான இயேசுவை, தேவன் உயிரோடே எழுப்பினார்(அப்.2:24). அவரே வாக்குமாறாத நமது தேவன்; “இயேசுவே உம்மையே நேசிக்கிறேன்” என்று வாக்களித்த நாம் மாத்திரம் வாக்கு மாறலாமா? மரணத்தின் கூர் முறிந்தது. ஜெயங்கொண்ட தேவனைக் கொண்டாடுவோமாக.

💫 இன்றைய சிந்தனைக்கு:  

மரித்த ஒருவரல்ல, “உயிரோடே எழுப்பப்பட்டு, இன்றும் ஜீவனோடுள்ள தேவனே என் தேவன்” என்ற சிந்தனை என் வாழ்வில் ஏற்படுத்துகின்ற தாக்கம் என்ன?

📘 அனுதினமும் தேவனுடன்.

51 thoughts on “2023 ஏப்ரல் 10 திங்கள்

 1. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

 2. I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.

 3. Read reviews and was a little hesitant since I had already inputted my order. or possibly but thank god, I had no issues. enjoy the received item in a timely matter, they are in new condition. no matter what so happy I made the purchase. Will be definitely be purchasing again.
  cheap retro jordans

 4. |One thing you are going to want to do is always keep an eye open for changes in style. Styles are constantly changing, and you can find out what is new by looking at fashion magazines every now and then. They are likely going to showcase the new trends first.

 5. Hey very nice website!! Guy .. Excellent ..

  Superb .. I’ll bookmark your website and take the feeds
  additionally? I’m glad to find so many useful information here in the submit, we need work out extra techniques on this
  regard, thanks for sharing. . . . . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Solverwp- WordPress Theme and Plugin