ஜுன், 6 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ரோமர் 8:26-30 முற்றுமுழுதுமாக அறிந்தவர் …நாம் ஏற்றபடி, வேண்டிக்கொள்ள …ஆவியானவர் தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ரோமர் 8:26 சாதாரணமாக ஒருவரோடு சம்பாஷிக்கிறபோது, நாம் சொல்லுவதை மற்றவர் புரிந்து கொள்ளக் கடினப்படுவதைக் கண்டால், நாம் மீண்டும் தெளிவாக அதே காரியத்தை அவர் புரிந்துகொள்ளும்படி சொல்லுவதுண்டு. வேறு ஒரு சந்தர்ப்பத்தில், சொல்வதை தவறாகப் புரிந்துகொண்ட ஒருவர் நம்மைப்பற்றி தப்பாக

ஜுன், 5 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோபு 2:1-10 எதிர்மறையான சிந்தனை அப்பொழுது அவன் மனைவி …நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். யோபு 2:9 யோபுவின் வாழ்க்கையைக்குறித்து வேதப்படிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில், யோபுவின் மனைவி யோபுவைத் திட்டியதைக்குறித்துப் பேசப்பட்டது. அப்போது, அங்கிருந்த ஒரு தாயார், “யோபுவின் மனைவி அவளது விரக்தியிலேயே இப்படியாகப் பேசினாள். அதை நாம் குற்றம்

ஜுன், 4 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 18:1-8 பலனளிக்கும் தேவன் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்… லூக்கா 18:1 தேவனுடைய செய்தி: நாம் சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும். தியானம்: தேவனைக் குறித்தும் சக மனிதரைக்குறித்தும் கவலைப்படாத ஒரு நியாயாதிபதியிடம் “எனக்குத் தீமை செய்கிற ஒரு மனிதன் உள்ளான். எனக்கு நீதி வழங்குங்கள்” என்றாள் விதவை பெண். பல நாள் அக்கறையற்று இருந்த அவன், அவளது தொந்தரவு நிமித்தம்

ஜுன் 3 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : தானி 3:14-30 நம்பிக்கையோடு செயற்படு] நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார், …விடுவிக்காமற்போனாலும்,… தானியேல் 3:17-18 நம்பிக்கையென்பது, வெறும் வாய் வார்த்தையில் மட்டும் வெளிப்படுவதல்ல, அது செயலிலும் வெளிப்படவேண்டும். இன்று தேவன் மீது அதிக நம்பிக்கையுள்ளவர்கள் போல பேசுபவர்களெல்லாம், ஒரு இக்கட்டான சூழ்நிலை வந்ததும் தடுமாறிப் போகிறார்களே! அப்படியென்றால் அவர்களது நம்பிக்கை எங்கே? நம்பிக்கையென்பது ஒரு புள்ளியல்ல,

ஜுன், 2 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 15:1-6 சுயபுத்தி சாராய் ஆபிராமை நோக்கி, …என் அடிமைப்பெண்ணோடே சேரும், …சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். ஆதியாகமம் 16:2 ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பு கர்த்தரிடத்தில் கேட்பதற்கும், நமது திட்டப் படியே ஆரம்பித்துச் செய்துவிட்டு, “கடவுளே, இதை ஆசீர்வதியும்” என்று ஜெபிப்ப தற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. சிலர் கர்த்தருக்கே ஆலோசனை சொல்வது போல நடந்துகொள்வதும் உண்டு. தனக்குப்

ஜுன் 1, 2022 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : ஆதி 16:1-16 கடினமான பாதை அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின் கீழ் அடங்கியிரு என்றார். ஆதியாகமம் 16:9 இலகுவான பாதையிலே நாம் கண்ணை மூடிக்கொண்டும் பயமில்லாமலும் நடந்து விடலாம். ஆனால் கடினமான பாதையில் செல்லும்போது, ஒவ்வொரு நிமிடமும் விழிப் போடும், கவனத்தோடும் செல்லவேண்டியதாக இருக்கும். காரணம், நாம் கவனமாக நடக்காவிட்டால் ஆபத்துக்களையும் எதிர்நோக்க

31 மே, 2022 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 103:1-2 முழு ஆத்துமாவோடு… என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி. என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. சங்கீதம் 103:1 வாழ்வின் சாதகமான பாதகமான சகலவிதமான நிலைகளிலும் தன் தேவனைத் துதிக்கும்படி தன் ஆத்துமாவுக்கே அழைப்புவிடுத்த தாவீதுக்கு யாருமே ஒப்பாக முடியாது. தாவீது தனது உணர்வுகளைத் தேவனுக்கு முன்பாக ஒருபோதும் அடக்கி வைக்கவேயில்லை. கோபம், குதூகலம், பாவஉணர்வு

30 மே, 2022 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 51 உடைந்த கண்ணாடித் துண்டுகள் தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும். நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங்கீதம் 51:10 அருமையானதொரு முகம்பார்க்கும் கண்ணாடி, விழுந்து, பல துண ;டுகளாக உடைந்து கிடந்தது. இதைப் பார்த்தவர்கள் சிலரது கருத்துக்கள் இதோ! “பாவத்தில் விழுகிற வன் வாழ்வும் இப்படித்தான் துண்டுதுண்டாகிறது” என்றார் ஒருவர். “இதனால் இனி உபயோகம் இல்லை”

29 மே, 2022 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : யோசுவா 1:1-9 ஒரே வழி …இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். யோசுவா 1:8 “அவசரம்” தியானத்திற்கு உதவாது. தேவனோடு உறவுகொள்ளும் தியானம் இல்லா விட்டால் வாழ்வில் வெற்றியும் கிடையாது. தேவனுக்குள்ளான வெற்றி இல்லாவிட்டால் தேவனுக்காக எதையும் சாதிக்கவும் முடியாது. அந்தச் சாதனை இல்லாவிட்டால் நாம் வாழ்ந்து என்ன பயன்? வாழ்வின் நோக்கம்

28 மே, 2022 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 17:20-37 தேவனுடைய ராஜ்யம் தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்துபோவான். இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான். லூக்கா 17:33 தேவனுடைய செய்தி: இயேசு தமது வல்லமையினால் அநேகரை குணமாக்கினார். தியானம்: இயேசுவானவர் மீண்டும் வரும்போது மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசை வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: தேவனுடைய

Solverwp- WordPress Theme and Plugin