4 மார்ச், 2022 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : எபேசியர் 3:20 – 4:3 நான் யாருடைய கைதி? ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில்… எபேசியர் 4:1 ஒரு தடவை சிறைச்சாலை ஒன்றுக்குச் சென்று பரிசுகள் கொடுத்து, கைதிகளுடன் பேசுவதற்கு வாய்ப்புக் கிடைத்தபோது, மனதில் தோன்றிய சிந்தனை: “சகோதரரே, உங்களுக்கும் எங்களுக்கும் வேறுபாடு இல்லை. குற்றச்செயல்களில் அகப்பட்டோ, குற்றஞ்சாட்டப்பட்டோ நீங்கள் உள்ளே இருக்கிறீர்கள். எங்கள் குற்றங்கள்

3 மார்ச், 2022 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :  2கொரிந்தியர் 6:16 எபேசியர் 3:14-19 ஆண்டவர் என்னுள்ளே! விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி நிலைபெற்றவர்களாகி… எபேசியர் 3:17 ஒரு குடும்பம் வாழுகின்ற வீடு, அது வெறும் கட்டிடம் அல்ல; அது ஒரு இல்லம்! ஆனால், வீட்டின் தலைவனாக, அங்கத்தவராயிருக்கிற உங்களை வீட்டிலுள்ளவர்கள் பகைத்தால், புரிந்துகொள்ளாமற்போனால், உங்களையும் உங்கள் பேச்சையும் புறக் கணித்தால் எப்படி உணருவீர்கள்?

2 மார்ச், 2022 புதன்

­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 19 அடியேனை விலக்கிக் காரும்! …மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்… சங்கீதம் 19:12,13 அழகான இலைகளையும், சிறிய சிவப்புப் பூக்களையும் தருகின்ற ஒருவகை செடிகளை ஜாடியில் வளர்த்திருந்தேன். பச்சை இலைகளும் சிவப்புப் பூக்களும் கொள்ளை அழகு! கவனமாகப் பராமரித்து வந்தபோதும், சில நாட்களின் பின்னர், செடிகள் சோர்வடைய ஆரம்பித்திருந்தன. துக்கத்தோடு

1 மார்ச், 2022 செவ்வாய்

­­ 📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : சங்கீதம் 139 என்னை ஆராயும் கர்த்தாவே! வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். சங்கீதம் 139:24 “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்” என்று சங்கீதத்தை ஆரம்பிப் பதிலிருந்தே, கர்த்தர் தன்னை முற்றும் முழுதாக அறிந்திருக்கிறவர் என்று தாவீது அறிக்கை செய்வதை நாம் கவனிக்கவேண்டும். கர்த்தர் சகலத்தையும் காண்கிறவர், சகலமும்

28 பெப்ரவரி, 2022 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லேவியராகமம் 20:1-27 பரிசுத்தமாக்குகின்ற கர்த்தர்! …நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். லேவியராகமம் 20:8 இவ்வுலக வாழ்வின் தேவைகளுக்கெல்லாம் தேவனுடைய வாக்குத்தத்தங்களைத் தேடி நாடி நிற்கிற நாம், நித்தியத்திற்கு அடுத்த வாக்குத்தத்தங்களைத் தேடி அவற்றைச் சுதந்திரித்துக் கொள்கிறோமா? “என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள், நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்” என்று கர்த்தர் வாக்களித்திருக்கிறார். இங்கேயும் ஒரு நிபந்தனை உண்டு. கர்த்தருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு

27 பெப்ரவரி, 2022 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: ஏசாயா 49:12-18 நம்மைப் பாதுகாக்கின்ற தேவன்! …உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது. ஏசாயா 49:16 அற்புதமான வாக்குத்தத்தம்! தமது உள்ளங்கைகளில் நம்மை வரைந்திருக்கிறவர், “உன்னைச் சுற்றியுள்ள மதில்கள், உன் பாதுகாப்பு என்முன் இருக்கிறது” என்று சகரியா தீர்க்கதரிசிக்கூடாக கூறுகிறார். “ஜனங்களே ஓடி வாருங்கள்” என அழைக்கிற அவர், ஜனத்திரளினால் நிறைந்த எருசலேம் மதிலில்லாத வாசஸ்தலமாக இருக்கக் கூடாது என்று

26 பெப்ரவரி, 2022 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 13:31-35 தேவனை அசட்டைபண்ணுவதா? …பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. லூக்கா 13:34 தேவனுடைய செய்தி: கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். (13:34) தியானம்: ஆட்சிப் பொறுப்பிலுள்ளவர்களுக்கு இயேசு பயப்படவில்லை. அவர்கள் தவறை சுட்டிக்காட்ட தவறவில்லை. தமது இவ்வுலக

25 பெப்ரவரி, 2022 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யாக்கோபு 1:1-18 குறைவையும் நிறைவாக்குகிறவர்! நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல் பூரணராயும் நிறைவள்ளவர்களாயும் இருக்கும்படி… யாக்கோபு 1:4 “ஒன்றிலும் குறைவற்றவர்கள், பூரணர்” இவைதான் வேதம் நமக்குத் தருகின்ற உறுதி. நாம் இப்படியேதான் வாழவேண்டும் எனக் கர்த்தரும் விரும்புகிறார். ஆனால், அந்த நிறைவு நமக்குள் உண்டா? “நான் ஒன்றிலும் குறைவற்றவன்” என்றோ, அல்லது, “குறைவிலும் நிறைவுள்ளவன்” என்றோ நம்மில் யார் தைரியமாகக் கூறக்கூடும்?  “கண்டுபிடிப்புகளின்

24 பெப்ரவரி, 2022 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: சங்கீதம் 23:1-6 தேற்றுகின்ற கர்த்தரின் கோல் தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர். உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4 மரணவேதனையில் நாட்களை எண்ணிக்கொண்டு படுத்திருந்தவளை சரீர உபாதை வாட்டி வதைத்தது. எந்த வைத்தியரோ, எந்த மனுஷரோ உதவ முடியாத மயக்கநிலையில் இருந்த அவள் முன்னே ஒரு கரிய உருவம் அவளையே பார்ப்பதுபோல இருந்தது. அடுத்த கணமே அதன் கைகள் அவளை

23 பெப்ரவரி, 2022 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 14:8-21 கேட்டுப் பெற்றுக்கொள்ளுவோம்! என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். யோவான் 14:14 “இப்போது பாடசாலைக்குப் போ. வீடு திரும்பியபின் நீ எதைக் கேட்டாலும் நான் செய்வேன்” என்று கூறி மகனைச் சமாளித்து பாடசாலைக்கு அனுப்பிவிட்டார் அப்பா. மகனுக்கோ அன்று படிப்பே ஒடவில்லை. “எதைக் கேட்கலாம்” என்பதே சிந்தனை. உடுப்பு, சப்பாத்து, இவை எப்படியும் கிடைக்கும்.

Solverwp- WordPress Theme and Plugin