5 டிசம்பர், 2021 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 4:27-42 சாட்சி பகிர்ந்தாள்! நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன ..வார்த்தையினிமித்தம் அநேகர் அவர் மேல்…விசுவாசமுள்ளவர்களானார்கள். யோவான் 4:39 சாட்சி கூறுவது என்பது வெறும் வார்த்தையில் மட்டுமல்ல, அது வாழ்க்கைச் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். இன்று சிலர் வாயின் வார்த்தையினால் பல சாட்சிகளைச் சொல்வ துண்டு. ஆனால் அவர்கள் கூறுவதற்கும், அவர்களது வாழ்க்கைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் காணப்படாது.

4 டிசம்பர், 2021 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:1-4 எங்களுக்குப் போதிக்கவேண்டும் …பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக… லூக்கா 11:2 தேவனுடைய செய்தி: ஆண்டவர் எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று தருகிறார். தியானம்: இயேசு ஓரிடத்தில் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார். சீஷர்கள் கேட்டுக் கொண்டதினால், அவர்களுக்கும் பிரார்த்தனை செய்யக் கற்றுக்கொடுத்தார். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்கு நாம் மன்னிக்கவேண்டும்.

3 டிசம்பர், 2021 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 4:1-26 அன்புடன் உணர்த்து! …நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்… யோவான் 4:14 சபையிலே ஒருவர் தவறுசெய்வதைக் கண்டால், அதை நேரடியாக அவரிடம் சொல்லத் தயங்குகிறோம். ஆனால், பிரசங்கிக்க ஒரு தருணம் கிடைக்கும்போது, அந்நபரின் செயலைக் குறித்து, பிரசங்கத்திலே பகிரங்கமாகச் சொல்லி அவரையும் நோகடித்து, அவர் செய்த தவறையும் பகிரங்கப்படுத்திவிடுகிறோம். இது துக்கத்துக்குரிய விடயம்.

2 டிசம்பர், 2021 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 3:24-36 முன்னோடி நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். யோவான் 3:28 ஒரு நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட பிரதம விருந்தினருக்குரிய வரவேற்பு ஆயத்தங்களைச் செய்கின்ற பொறுப்பு ஒரு குறிப்பிட்ட ஒருவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் தேவையான மாலைகள், சிற்றுண்டிகள் எல்லாவற்றையும் வாங்கினார். அதிக மான பொருட்கள் இருந்ததால், ஒரு வாடகைக் காரில் பொருட்களை ஏற்றி, தானும்