22 டிசம்பர், 2021 புதன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 13:34-38 யார் இயேசுவின் சீஷன்? நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள். யோவான் 13:35 ஒருவருடைய தலைமயிர் அதிகம் கொட்டிவிட்டதைக் கண்ட ஒரு வயோதிப தாயார், “தம்பி இந்த எண்ணெய்யைப் பாவித்துப் பாரும். உமக்குப் பலன் கிடைக்கும்” என்று ஒரு எண்ணெயை அறிமுகம் செய்தார். அதைக்கேட்ட அந்த தம்பியும் அந்தக் குறிப்பிட்ட எண்ணெயை வாங்கினார்.

25 டிசம்பர், 2021 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:29-36 அடையாளமாய் இருக்கிறவர் மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். லூக்கா 11:30 தேவனுடைய செய்தி: உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு! தியானம்: அன்றுபோல, இன்று வாழும் மக்கள் தீயவர்கள். அவர்கள் அடையாளத்தைத் தேடுகிறார்கள். சாலொமோனை விட, யோனாவை விட பெரியவர் இங்கே மானிட குமாரனாக வந்திருக்கிறார். அவரே நமது வாழ்விற்கு வெளிச்சம் தருபவர். விசுவாசிக்க வேண்டிய சத்தியம்: கண்ணானது சரீரத்தின்

24 டிசம்பர், 2021 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 1:1-13 மெய்யான ஒளி …அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். யோவான் 1:12 கிறிஸ்மஸ் என்றதும் அநேகமாக கொண்டாட்ட மனநிலை வந்துவிடுகிறது. புதிய ஆடைகள், புதிய உணவுப்பண்டங்கள் என்றும், ஆராதனையில் புதிய பாடல்களையும்கூட நாம் தயார்படுத்திவிடுகிறோம். ஆனால், இன்றைய சூழ்நிலை யாவையும் தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டது. இந்த ஆரவாரங்கள் சாத்தியமானதா, அல்லது முடங்கிக்கிடக்க

23 டிசம்பர், 2021 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 17:6-26 ஒன்றாயிருக்கும்படிக்கு… நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17:22 மரணப்படுக்கையிலிருந்த ஒரு செல்வந்தர், தனது ஏழு குமாரரையும் அழைத்து, தனது சொத்துக்களைச் சமமாகப் பங்கிட்டு ஏழுபேரிடமும் கொடுத்தார். பின்னர், ஏழு தடிகள் ஒன்றாகச் சேர்த்துக்கட்டப்பட்ட ஒரு கட்டை அவர்களிடம் கொடுத்து அதை உடைக்கும் படி சொன்னார். ஏழுபேரும் முயன்றும்

21 டிசம்பர், 2021 செவ்வாய்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 12:12-50 மகிமை யாருக்கு? அவர்கள் தேவனால் வரும் மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். யோவான் 12:43 கர்த்தருக்கென்று தங்களை உண்மையாகவே அர்ப்பணித்து ஊழியத்திற்கு அநேகர் புறப்படுகிறார்கள். ஆனால் அவர்களில் சிலர், சிலகாலம் சென்றதும், அதே ஊழியங்கள் மூலமாக தமக்குப் புகழையும், வசதிகளையும் ஏற்படுத்திக்கொண்டு, வழிமாறிப் போவதையும் காண்கிறோம். இவர்கள் தங்களையும் ஏமாற்றி, பிறரையும் ஏமாற்றுகிறார்கள் என்பதை உணராதிருப்பது

20 டிசம்பர், 2021 திங்கள்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 12:1-11 இயேசுவுக்காய்.. லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய் இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால், பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள். யோவான் 12:10-11 இயேசுவோடு நெருங்கிய உறவில் வாழுபவர்கள் அநேகர் உண்டு. அதேசமயம் இயேசுவைத் தேவைக்காக மட்டும் தேடுபவர்களும் உண்டு. இன்னும், இயேசுவைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமலும் சிலர் இருக்கிறார்கள். “கடவுளுக்கு அதிக நெருக்கமாகப் போனால் பின்னர் நமக்கு விருப்பமான

19 டிசம்பர், 2021 ஞாயிறு

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 11:27-48 துக்கத்தில் பங்கெடுப்பார்! இயேசு கண்ணீர் விட்டார். யோவான் 11:35 “உன் கண்ணீரைத் துடைக்கும் இயேசு உனக்காய் இருக்கிறார். உன் கவலைகள் போக்கும் இயேசு உனக்காய் ஜெபிக்கிறார். கலங்காதிரு மனமே, திகையாதிரு தினமே, கர்த்தர் உன்னை நடத்துவார்…” இது ஒரு பாடலின் வரிகள்தான் என்றாலும் இது உண்மையே. நாம் ஆராதிக்கும் தேவன் நம்மீது கரிசனை கொள்பவராக, நம்மைக் கைவிடாதவராக, நேசிப்பவராக

18 டிசம்பர், 2021 சனி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 11:14-28 இயேசுவின் வல்லமை தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்… லூக்கா 11:28 தேவனுடைய செய்தி: தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதை நாம் உணர்ந்திட அறிந்திட அதிலே வாழ்ந்திட வேண்டும். தியானம்: ஊமையான ஒரு மனிதனிடமிருந்து பிசாசை இயேசு துரத்தினார். அத்துடன், பல ஆயுதங்கள் ஏந்திய ஒரு வலிய மனிதன் தன் சொந்த வீட்டைக் காவல் காக்கும்போது

17 டிசம்பர், 2021 வெள்ளி

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 11:1-26 தாமதத்தைத் தாங்குவேனா? மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். யோவான் 11:21 இன்று நமது வாழ்வுமுறையில் தாமதத்திற்கும், நமக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை யென்றாகிவிட்டது. பசிக்கிறது என்றவுடன் உடனடி உணவுகள்; ஒரு செய்தியை உடனடியாகப் பரிமாற வட்ஸ்சப், நமது கைகளில் விதவிதமான கையடக்கத் தொலைபேசிகள். இப்படியாக நினைத்தவுடனே செய்துவிடக்கூடிய வசதி வாய்ப்புகளுடன் நாம்

16 டிசம்பர், 2021 வியாழன்

📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰 📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: யோவான் 10:1-16 இயேசுவின் மந்தை நானே நல்ல மேய்ப்பன், நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். யோவான் 10:11 கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி முதலாவது மேய்ப்பர்களுக்கே அறிவிக்கப்பட்டது. அந்த இராத்திரியில் ஊரே தூங்கிக்கொண்டிருந்தபோது, தங்கள் மந்தைகளுக்காக நித்திரையைத் தியாகம்செய்து வயல்வெளியில் தங்கள் மந்தைகளைக் காத்துக் கொண்டிருந்தவர்கள் மேய்ப்பர்கள்தான். அந்த வேளையில்தான் அவர்களுக்குக் கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி கிடைத்தது. இவ்விதமான கரிசனைமிக்க