? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 4:31-37

அசுத்த ஆவியிலிருந்து விடுதலை

 …நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்த சத்தமிட்டான். லூக்கா 4:34

தேவனுடைய செய்தி:

இயேசுவின் வசனம் அதிகாரமுள்ளதாயிருக்கிறது.

தியானம்:

கப்பர்நகூமுக்கு சென்ற இயேசு அதிகாரத்துடன் பேசினார். அங்கு, அசுத்த ஆவி பீடித்த ஒரு மனிதனை இயேசு விடுதலையாக்கினார். அதைக்கண்ட மக்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்குக் கட்டளை இட்டபோது அவை வெளியேறின.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் பரிசுத்தர். அவரை நாம் விசுவாசிக்க வேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

இயேசுவின் போதகத்தைக்குறித்து மக்கள் ஆச்சரியப்பட்டதேன்?

இயேசுவைக் குறித்து ‘உம்மை இன்னார் என்று அறிவேன்@ நீர் தேவனுடைய பரிசுத்தர்” என்று அசுத்த ஆவி பீடித்த மனிதன் உரத்த சத்தமிட்டதேன்?

‘நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ” என்று அதை ஏன் இயேசு அதட்டினார்?

பிசாசு பீடித்த மனிதனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளிய போதிலும், அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது ஏன்? என்று நினைக்கிறீர்கள்? இயேசு நம்முடன் இருந்தால், பிசாசினால் என்ன செய்ய முடியும்?

‘அவைகள் புறப்பட்டுப் போகிறதே” என்று ஒருவரோடொருவர் மக்கள் பேசிக் கொண்டதற்கான காரணம் என்ன?

இயேசுவைப் பற்றிய செய்தியை நாம் பரப்புகின்றோமா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin