📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 9:1-11

சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்

தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். லூக்கா 9:2

தேவனுடைய செய்தி:

ஜனங்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடைய வேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார்.

தியானம்:

இயேசு பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமை யும் அதிகாரமும் அளித்தார். தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை பிரசங்கிக்கவும், நோயாளிகளைக் குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து மற்றவர்களிடம் அறிவிக்கவேண்டும்.

பிரயோகப்படுத்தல் :

குறுகியகால நற்செய்தி அறிவிக்கும் வழிப்பயணத்தில் தடியோ, பையோ, உணவோ பணமோ, ஒன்றும் எடுத்துச் செல்லவேண்டாம் என இயேசு கூறுவதற்கூடாக விசுவாச பயிற்சி கற்றுக்கொள்வது சீடருக்கு அவசியமா?

வசனம் 5ன்படி, யாராவது நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் என்ன செய்யலாம்?

வசனம் 7-9ன்படி இயேசுவைக்குறித்து ஏரோது மக்களிடமிருந்து கேள்விப்பட்டவை என்ன? அதன் உண்மைதன்மை எப்படிப்பட்டது?

வசனம் 11ன்படி, இயேசுவை அறிந்த மக்கள் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து வந்தபோது இயேசு செய்தது என்ன?

💫 இன்றைய எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *