📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு : லூக்கா 15:1-7
பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம்
…தொண்ணூற்றொன்பது நீதிமான்களை…பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்… லூக் 15:7
தேவனுடைய செய்தி:
இயேசு பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார்.
தியானம்:
நூறு ஆடுகள் இருந்தாலும், ஒன்று காணாமல் போனால், ஒரு நல்ல மேய்ப்பன் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் தேடிக் கொண்டே இருப்பான். கண்டுபிடித்தபோது, மற்றவர்களோடு சேர்ந்து சந்தோஷப்படுவான். அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும்.
விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:
மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்.
பிரயோகப்படுத்தல் :
வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்த போது, பரிசேயரும் வேதபாரகரின் மனப்பான்மை எப்படியிருந்தது?
நூறு ஆடுகளை உடையவன், காணாமற்போன தன் ஒரு ஆட்டைக் குறித்து சந்தோஷப்படுவது ஏன்? இந்த அனுபவம் உங்களுக்கு உண்டா?
“என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள்” என்று கூறுபவர்களிடம் உங்களால் மனதார சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதபடி தடுப்பது எவை?
பரலோகத்தில் என் நிமித்தம் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்குமா?
நான் யாரையாகிலும் மனந்திரும்ப வைத்ததுண்டா? அதற்காக நான் என்ன செய்துள்ளேன்?
💫 இன்றைய எனது சிந்தனை
📘 அனுதினமும் தேவனுடன்.
Гў HeГў d be blown away to know how many more people will be able to relive it now buy cialis 5mg daily use