? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா6:37-42

உங்களையே உற்றுப் பாருங்கள்!

விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலை பண்ணப்படுவீர்கள். லூக்கா 6:37

தேவனுடைய செய்தி:

பிறரை மன்னியுங்கள். இதனால் நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள்.

தியானம்:

‘ஒரு குருடன் இன்னொரு குருடனுக்கு வழிகாட்ட முடியுமா?’ இல்லை. இருவரும் குழிக்குள் விழுவார்கள் என்ற உவமையை இயேசு கூறினார்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

நீங்கள் பிறருக்குக் கொடுக்கிறபடியே தேவனும் உங்களுக்குக் கொடுப்பார்.

பிரயோகப்படுத்தல் :

பிறரை மன்னிப்பதன் அவசியம் என்ன? அதனால் எனக்கு கிடைக்கின்ற ஆசீர்வாதங்கள் எப்படிப்பட்டவை? அதை நான் அனுபவித்ததுண்டா?

கொடுத்தலைக்குறித்து வசனம் 38ல் இயேசு என்ன கூறுகின்றார்? பிறருக்குக் கொடுங்கள். நீங்களும் பெறுவீர்கள் என்பதன் அர்த்தம் என்ன?

‘ஒரு ஆசிரியரைக் காட்டிலும் மாணவன் நன்கு கற்றுத் தேர்ந்தபோது, தனது ஆசிரியரைப்போல் விளங்குவான்.’ இதன் அர்த்தம் என்ன? நாமும் அடுத்தக்கட்டத்திற்குள் செல்ல முயற்சி எடுக்கின்றோமா?

சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற சிறு தூசியை எடுத்துப் போடட்டுமா?’ என்று கூறுவது ஏன்? பிறருடைய குற்றங்கள் ஏன் நமக்குப் பெரிதாகத் தோன்றுகின்றது?

‘உன் கண்ணில் இருக்கும் மரத்துண்டை எடுத்துவிடு. அப்போது உன் சகோதரன் கண்ணிலிருக்கும் தூசியை எடுத்துப்போடுவதற்கு நீ தெளிவாகப் பார்க்க முடியும்’ என்றார் இயேசு. என்னிடமுள்ள பெரும் குற்றங்கள் என்ன? அவற்றை நீக்கிவிட நான் முயற்சி எடுக்கின்றேனா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin