📖 சத்தியவசனம் – இலங்கை. 🇱🇰

📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு: லூக்கா 13:22-30

ஒடுக்கமான கதவு

இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்… லூக்கா 13:24

தேவனுடைய செய்தி:

கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.

தியானம்:

முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

இரட்சிக்கப்படுவதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இயேசு ஒருவர் மாத்திரமே இரட்சிப்பிற்கான வழி.

பிரயோகப்படுத்தல் :

மீட்பைப் பெற அநேகர் பல வழிகளை நாடுனாலும் அவர்களால் மீட்பைப் பெறக் கூடாமல் இருப்பது ஏன்? நற்செயல்களை நம்பி ஏமாறுவோர் எப்படிப்பட்டவர்கள்? மீட்புக்கான ஒரே வழி யார்? வீட்டுச் சொந்தக்காரன் யார்?

அவர் கதவை மூடினால் யாரால் திறக்க முடியும்? கதவை திறக்கும்படி கெஞ்சுவோரிடம் வீட்டுச் சொந்தக்காரனின் பதில் என்னவாக இருந்தது? (வசனம் 27)

புறம்பே தள்ளப்பட்டவர்கள் யார்? தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்கள் யார்? இவ்விருவருக்கும் உள்ள வித்தியாசம், வேற்றுமை என்ன?

“அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என்று இயேசு என்னிடம் கூறாமலிருப்பதற்கு நான் செய்யவேண்டியதென்ன?

எனக்குரிய இடத்தை நான் தவறவிட்டால், எங்கிருப்பவர்கள் அதைக் கைப்பற்றுவார்கள்? (வசனம் 29)

கடைசியாக இருக்கிற சிலர் எப்படி முதன்மையானவர்களாக மாறுவார்கள்?

எனது சிந்தனை:

📘 அனுதினமும் தேவனுடன்.

Comments (42)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *