? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 5:17-26

திமிர்வாதக்காரன் குணமடைதல்

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது… லூக்கா 5:23

தேவனுடைய செய்தி:

பூமியில் பாவங்களை மன்னிக்க தேவ குமாரனுக்கு அதிகாரம் உண்டு.

தியானம்:

சில மனிதர்கள் கூரையின் மேலேறி, ஒரு துவாரத்தின் வழியாகப் படுக்கை யில் இருந்த திமிர்வாதக்காரனை இயேசுவுக்கு முன் இறக்கினர். இயேசுவோ: ‘மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது, நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ” என்றார். அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். மக்களோ, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

தேவன் பாவங்களை மன்னிக்கிறார். நோய்களைக் குணமாக்குகிறார்.

பிரயோகப்படுத்தல் :

திமிர்வாதக்காரனை படுக்கையோடே கொண்டுவந்த நண்பர்களின் விசுவாசம் எப்படிப்பட்டது?

வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவின் வார்த்தையைக் குறித்து சிந்தித்தது என்ன? ஏன் அவர்கள் இயேசுவின் வார்த்தைகளை தேவதூஷணமாக கருதினார்கள்? அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமைக்கு அவர்களிடம் இருந்த தடைக்கல் என்ன?

இன்று என் பாவங்கள் மன்னிக்கப்பட்டுள்ளதா? யார் எனது பாவங்களை மன்னிப்பார்? இயேசுவிடம் நான் செல்ல முடியாமைக்கு தடையாக இருப்பது என்ன?

‘தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்?” இதன்படி, இயேசு யார் என்பதை ருசிபார்த்துள்ளீர்களா?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Comments (110)

 1. Reply

  Great goods from you, man. I have understand
  your stuff previous to and you’re just too fantastic.
  I actually like what you have acquired here, really like what you’re stating and
  the way in which you say it. You make it enjoyable and you still care for to
  keep it wise. I can’t wait to read much more from you.
  This is really a tremendous site.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *