? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: அப்போஸ்தலர் 1:1-12

என்னில் என் இயேசு!

பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, …பூமியின் கடைசிபரியந்தமும் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர்  1:8

பெற்றோர் வாழும்போது, ‘இவள், இவன் எங்களுடைய மகள், மகன்” என்று சொல்வதுண்டு. அவர்கள் மறைந்த பிற்பாடு, நாம், ‘இன்னாருடைய மகள் அல்லது மகன்” என்று நம்மை மாத்திரமல்ல, மறைந்த பெற்றோரையும் அறிமுகப்படுத்துகிறோம். ஆக, மறைந்த பெற்றோரின் பிள்ளைகள் நாங்கள்தான் என்பதற்கு நாமே சாட்சிகள். இன்னொரு வகையில் சொன்னால், நமது பெற்றோர் தமது பிள்ளைகளை தங்கள் சாட்சிகளாக விட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இப்படியிருக்க, இந்த சாட்சி எப்படிப்பட்ட தாயிருக்கிறது? நம்மில் நமது பெற்றோர் பெருமையடைவார்களா?

தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்த இயேசு, பிதாவின் வேளைகளைப் பிதா விடமே விட்டுவிட்டு, பரிசுத்தஆவியானவர் வரும்போது பெலனடைந்து, பூமியின் முடிவு பரியந்தம் தமக்குச் சாட்சிகளாயிருக்கவேண்டும் என்றார். பூமியின் முடிவுபரியந்தம் என்றபோது, இந்த சீஷர்கள் பூமியின் முடிவுமட்டும் உயிருடன் இருக்கப்போகிறார் கள் என்ற அர்த்தத்திலா கூறுகிறார்? இல்லை! இந்த சுவிசேஷம் தொடர்ந்து கடைசி மனுஷன்வரை அறிவிக்கப்பட வேண்டும் என்பதே தேவனுடைய சித்தம், திட்டம். சரி, ‘சாட்சிகளாயிருப்பீர்கள்” என்றால்? அதாவது, ‘நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்” (யோவா.13:15) என்று இயேசு கூறியவிதமாக, ‘இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள். ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார் “(1பேதுரு 2:21) என பேதுருவும் கூறுகின்றனர். ஆக, சாட்சியாயிருப்பது என்பதன் சாரமானது, ‘என் வாழ்வில், என் இயேசு பிரதிபலிக்கவேண்டும்” என்பதாகும்.

இன்று என்னை காண்கிறவர்கள், என்னில் இயேசுவைக் காணமுடிகிறதா? என் உடை நடை வாழ்வுமுறை எல்லாவற்றிலும் யாராவது சற்று என்னை நோகடித்துவிட்டால் அதற்கு எனது பதிற்செய்கை எப்படிப்பட்டது? அன்று இயேசு எப்படி வாழ்ந்துகாட்டினார் என்பதை உணர்ந்து, நாம் முகங்கொடுக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அப்படியே நமது பதிலுரையை வெளிப்படுத்தும்போது, இவன் யார்? இவள் யார்? வித்தியாசமாக இருக்கிறானே? என்பதை உலகம் காணுமே. அப்படித்தான் அன்று இயேசுவையும் உலகம் கண்டது. அவர் மரணத்தைத் தழுவியபோது, அவர் தோற்றுப்போனார் என்று உலகம் எண்ணியது. ஆனால் நடந்தது என்ன? மரணத்தையே வென்றெழுந்தார் நமது ஆண்டவர்! அவரே தமக்குச் சாட்சிகளாக இன்று நம்மை வைத்திருக்கிறார். அவரை நான் மகிமைப்படுத்துவேனா? துக்கப்படுத்துவேனா? அப் 1:1-12

? இன்றைய சிந்தனைக்கு:

இயேசுவுக்குச் சாட்சியுள்ள ஜீவியம் ஜீவிப்பதில் எனக்குள்ள பிரச்சனைதான் என்ன? என்னில் என் இயேசுவைக் காணமுடிகிறதா? இந்த விடயத்தில் நான் அடிக்கடி பின்வாங்கிப்போவதும் ஏன்?

? அனுதினமும் தேவனுடன்.

Comments (937)

 1. Reply

  Холостячка 2 сезон https://bit.ly/39ioLkW Смотреть онлайн шоу Холостячка 2 сезон на СТБ.
  Пост шоу можно смотреть тут. Холостячка стб 2 сезон 1-2 серия

 2. Reply

  Услуги консультации психолога. Онлайн консультация Приглашаем вас на консультации
  детского психолога. Приглашаем вас на
  консультации детского психолога.
  Консультация и лечение психотерапевта (психолога) Цены на услуги и консультации психолога.

  Консультация и лечение психотерапевта (психолога) Помощь профессионального Психолога.

 3. Reply

  hello my lovely stopforumspam member

  Welcome to Grosvenor Casinos, where you can play a wide range of casino games, from slots to poker, blackjack, and roulette! There’s something for everyone here – become a member of the casino to have the best of online casino gaming. Our Sportbook offers a range of sports betting odds and is available for pre event or in play bets 24/7 and 365 days of the year. Whether you’re here for football tournaments or the latest betting odds for horse racing, Tennis, Golf, Cricket and even Rugby Union, you are covered.

 4. Reply

  Cмотреть новый сезон онлайн, Озвучка – Перевод TVShows, лостфильм, алексфильм, Дубляж Игра в кальмара 2 сезон 1 серия Смешарики. Новый сезон, Бесстыдники, Сверхъестественное, Мистер Корман, Гранд, Нарко – все серии, все сезоны.