? சத்தியவசனம் – இலங்கை. ??

? இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி: லூக்கா 6:6-11

ஓய்வு நாளில் குணப்படுத்துதல்

…ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக்காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம்… லூக்கா 6:9

தேவனுடைய செய்தி:

இயேசுவானவர் நன்மை செய்பவராகவே செயற்பட்டார்.

தியானம்:

மற்றொரு ஓய்வுநாள் வந்தபோது இயேசு ஜெப ஆலயத்திற்குச் சென்றார். அங்கு ஜனங்களுக்குப் போதித்தார். வலதுகை முடமான ஒருவன் குணமாக்கினார். இதனால் பரிசேயர்களும், வேதபாரகர்களும் மிகவும் கோபமடைந்தனர்.

விசுவாசிக்க வேண்டிய சத்தியம்:

உன் கையை நீட்டு என்றார் இயேசு. அப்படியே சூம்பின வலதுகையை உடைய அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.

பிரயோகப்படுத்தல் :

நன்மை செய்த காரணத்தினால், மற்றவர்கள் உங்கள் மீது கோபமடைந்த சந்தர்ப்பம் உங்கள் வாழ்வில் ஏற்பட்டதுண்டா? அதை எவ்வாறு சமாளித்தீர்கள்?

ஓய்வு நாளில் இயேசு வலதுகை முடமான ஒருவனை குணமாக்கலாமா? குணமாக்காமல் விட்டிருந்தால் அவனது நிலைமை என்ன?

குற்றம் சுமத்தும்படியாக, ஏதேனும் தவறைச் செய்வாரா என யாராவது உங்களை நோக்கி எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்?

ஓய்வு நாளில் நல்லதைச் செய்வதா, கெட்டதைச் செய்வதா, எது நல்லது? ஓர் உயிரைப் பாதுகாப்பதா அல்லது அழிப்பதா எது சரியானது? என்று உங்களிடம் இயேசு கேட்டால் என்ன பதிலளிப்பீர்கள்?

இயேசுவானவரிடமிருந்து சுகமாக்குதலை நீங்கள் பெற்றுக்கொண்டால், என்ன செய்திருப்பீர்கள்? என்ன செய்ய வேண்டும்?

? இன்றைய எனது சிந்தனை:

? அனுதினமும் தேவனுடன்.

Solverwp- WordPress Theme and Plugin